Purananuru 9.p20
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p20
- Language
- Tamil
9.p20
1 - 6. “இருபெருவேந்தர் பொருவதுகருதியக்கால் ஒருவர், ஒருவர் நாட்டுவாழும்அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத்தகாதசாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப்போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்குஅறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாதுஅறமேயாமென்றற்கு ‘ஆதந் தோம்பல்’ என்றான்;அஃது ‘ஆவும்....மறத்தின்’ எனச் சான்றோர்கூறியவாற்றா னுணர்க; மன்னுயிர்காக்கும் அன்புடைவேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழுமென்றற்கு, ‘மேவற்றாகும்’என்றான்” (தொல். புறத்திணை. சூ. 2, ந.; இ.வி. 602, உரை) என்பனவும், “நான்பால் பசுவேதுறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரையோம்பே னெனின்யானவ னாக வென்றான்” (சீவக.443) என்பதும் இங்கே அறியத்தக்கவை.