Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 11.1

Maṇimēkalai urai 11.1

Language
Tamil

11.1

மந்திரங் கொடுத்த காதை

5 அறவோ னாசனத் தாயிழை யறிந்த
பிறவிய ளாயினள் பெற்றியு மைதென
விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து
பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்

1

உரை

5

அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் - மணிமேகலை புத்தனது பாத பீடிகையால் அறியப்பட்ட பிறவியை உடையளாயினாள், பெற்றியும் ஐது என - இவள் பெற்ற பேறும் அழகிது என்று, விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து - மணம் பொருந்திய மலர்களை ஏந்தி விசும்பினின்றும் இறங்கி, பொருவறு பூங்கொடி பூமியில் பொலிந்தென - ஒப்பற்ற பூங்கொடியானது பூமியின்கண் பொலிவு பெற்றாற்போல, வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம--;

அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள் என்க. பெற்றி - பேறு; ¹"பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற்போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத் தோன்றிய தெய்வ மென்க.

1 சில்ப். 15 :100.

Linked texts (1)