Maṇimēkalai's Renunciation 11.2
Maṇimēkalai urai 11.2
- Language
- Tamil
11.2
மந்திரங் கொடுத்த காதை
10 முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப
உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப்
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த
வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச்
சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர்
இளவள ஞாயிறு தோன்றிய தென்ன
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன
6
உரை
12
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப்பினையறிந்து நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும் உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்குதற்குரிய செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறந்தலை உலகத்து - அறிவினை யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் அறம் பாடு சிறக்க - அறத்தின் கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ உதித்தருளினை நின் திருவடிகளைப் பணிந்தேன் ;
பொருள் - உறுதிப்பொருள் ; ஈண்டு அறம்; ¹"பொருணீங்கிப் பொச்சாந்தார்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறந்தலை யுலகம் - அறிவின்மையாகிய வறுமையையுடைய உலக என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும், சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம்.
1 குறள். 246.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil