Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 13.1

Maṇimēkalai urai 13.1

Language
Tamil

13.1

அறவணர்த் தொழுத காதை

5 ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய்
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி
மும்முறை வணங்கி முறையுளி யேத்திப்

1

உரை

6

ஆங்கவர் தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத்திலிருக்கின்றார் என்று வினாவிக் கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரைமுதிர்ந்த உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து ;

நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும் முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்; மூதுரை - அறிவு மேம்பட்ட உரை. முறையுளி - முறையால் ; உளி : மூன்றனுருபின் பொருட்டு.

Linked texts (1)