Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 13.11

Maṇimēkalai urai 13.11

Language
Tamil

13.11

அறவணர்த் தொழுத காதை

110 ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்
ஈங்கிவ ரிருவரும் இளங்கொடி நின்னோ
டோங்குயர் போதி உரவோன் திருந்தடி
தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப்
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்

108

உரை

113

ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கயமலை பரசினர் ஆதலின்-தீர்த்தற்கரிய துயரத்தை நீக்கும் புத்தனுடைய பாதபங்கய மலையை வணங்கினர் ஆதலின், ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு-இளங்கொடி போல்வாய இவர் இருவரும் நின்னுடன், ஓங்குயர்போதி உரவோன் திருந்தடி - மிக உயர்ந்த போதியின்கீழ் அமர்ந்த மெய்யறிவுடையோனது திருந்திய அடிகளை, தொழுது வலங்கொண்டு தொடர்வினை நீங்கி - வலங் கொண்டுதொழுது வினைப்பற்றுக்களினின்றும் நீங்கி, பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் - குற்றமற்ற நல்ல வழியிலே செல்வர் காண்பாய்; உரவோன் - புத்தன் ; உரம் - திண்ணிய அறிவு. பழுதில் நன்னெறி - தூநெறி.

Linked texts (1)