Maṇimēkalai's Renunciation 13.12
Maṇimēkalai urai 13.12
- Language
- Tamil
13.12
அறவணர்த் தொழுத காதை
115
120 ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.
114
உரை
121
ஆருயிர் மருந்தாம்-உயிர்களைக் காக்கின்ற அருமருந்தாகிய, அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை - அமுதசுரபி யென்னும் பெருமை பொருந்திய பாத்திரத்தை நீ பெற்றிருக்கின்றாய் ஆகலின், மக்கள் தேவர் என இருசார்க்கும் - மக்கள் தேவர் என்னும் இரு பகுதிகட்கும், ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் - ஒத்த முடிவினையுடைய ஓர் அறத்தைக் கூறுகின்றேன், பசிப்பிணி தீர்த்தல் என்றே - அது பசிப்பிணி தீர்த்தலாம் என்று, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆகலின்-அறவணவடிகள் மிகப் பெரிய நல்லறத்தைக் கூறினர் ஆதலால், மடுத்த தீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட - மிகுந்த தீயினாற் கொளுத்தப்பட்டாற் போன்ற உயிர்களின் பசியானது அழியுமாறு, எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென் - மணிமேகலை தெய்வக் கடிஞையைக் கையில் எடுத்தனள்
என்க.
அவியுணவுடையராகலின் இவ் அறம் தேவர்க்கும் ஒத்ததாயிற்று. அது தீர்த்தலாகும் என விரித்துரைக்க.
இளங்கொடி அவர் தம்முடன் அடிகள் யாங்குளரென்று வினாய்க் குறுகி மாதவனடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினராதலின், இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் என வினை முடிவு செய்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil