Maṇimēkalai's Renunciation 13.3
Maṇimēkalai urai 13.3
- Language
- Tamil
13.3
அறவணர்த் தொழுத காதை
25
30 உரைந்த பூங்கொடு ஒருமூன்று மந்திரம்
தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போயபின் தீவ திலகையும்
ஐயெனத் தோன்றி யருளொடும் அடைந்ததும
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால்
கேளென் றுரைத்தக் கிளரொளி மாதெய்வம்
போகென மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்
21
உரை
30
உரைத்த பூங்கொடி-அங்ஙனங் கூறிய பூங்கொடி போலும் மணிமேகலா தெய்வம், ஒரு மூன்று மந்திரம் - மூன்று மந்திரங்களை, தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும் - தனக்கு அருளிச் செய்து அத் தெய்வம் சென்ற திறத்தையும், தெய்வம் போயபின் - மணிமேகலா தெய்வஞ் சென்ற பின்னர், தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் - தீவதிலகை விரைவாகத் தோன்றி அருளொடும் எய்தியதனையும், அடைந்த தெய்வம்-அடைந்த தெய்வமாகிய தீவதிலகை, ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் - ஆபுத்திரன் கையிலிருந்த வணங்குதற்குரிய சிறந்த பாத்திரத்தை நால்வகை வாய்மையுடன் அளித்ததனையும், ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து - ஆபுத்திரனது வரலாற்றை அறவணவடிகளிடம் கேட்பாயாக என்று கூறி, கிளர்ஒளி மாதெய்வம் -விளங்குகின்ற பேரொளியினையுடைய பெருமை பொருந்திய அத்தெய்வம், போகென மடந்தை போந்த வண்ணமும் - நின் பதியிடைப் போவாய் என உரைப்பத் தான் மீண்டுவந்த தன்மையையும், மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் - அறவணவடிகளை வணங்கி மொழிதலும்
மூன்று மந்திரம் - வேற்த்றுரு வெய்தவும், அந்தரய் திரியவும், பசி யொழியவும் செய்யும் மந்திரங்கள் (10 : 80--91:) ஐயென - வியக்குமாறு எனவுமாம். தோன்றி-புலப்பட்டு. வாய்மையின் - வாய்மையோடு.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil