Maṇimēkalai's Renunciation 13.4
Maṇimēkalai urai 13.4
- Language
- Tamil
13.4
அறவணர்த் தொழுத காதை
35
40 மணமே கலையுரை மாதவன் கேட்டுத்
தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப்
பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க
உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன்
நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த
அந்நா ளன்றியும் அருவினை கழூஉம்
ஆதி முதல்வன் அடியிணை யாகிய
பாதபங் கயமலை பரவிச் செல்வேன்
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்
துச்சயன் தன்னயோர் சூழ்பொழிற் கண்டேன்
மாபெருந் தானை மன்ன நின்னொடும்
தேவியர் தமக்கும் தீதின் றோவென
அழிதக வுள்ளமோ டரற்றின னாகி
ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன்
31
உரை
44
மணிமேகலை உரை மாதவன் கேட்டு - அறவணவடிகள் மணிமேகலையின் மொழியைக் கேட்டு, தணியா இன்பம் தலைத்தலை மேல்வர-குறையாத பேரின்பம் மேன்மேல் மிகா நிற்க, பொற்றொடி மாதர் நற்றிடம் சிறக்க-பொன் வளையல்களையணிந்த மாதே நினக்கு நல்ல கூறுபாடுகள் சிறப்பனவாக, உற்றுணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்-இவர்கள் வரலாற்றைக் கூறுவேன் நீ அதனைக் கேட்டு அறிவாயாக, நின்நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த - நின் பெருந் தெய்வம் நினக்கு எடுத்து கூறிய அந்நாள் அன்றியும் - அந் நாளிற் சென்றதல்லாமலும், அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணையாகிய - அரிய வினைகளைப் போக்கும் புத்தன் திருவடியிணைகள் பொருந்திய, பாதபங்கயமலை பரவிச் செல்வேன்-பாதபங்கயமலையைப் பணிந்து செல்லுவேன், கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழிற் கண்டேன் - கச்சய நகரத்தை ஆண்டுவந்த வீரக் கழலணிந்த கால்களையுடைய துச்சயன் என்ற மன்னனை ஒருபொழிலினிடத்துக் கண்டேன், மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின்றோ என - மிகப் பெரிய சேனைகளையுடைய அரசே நீயும்நின் தேவியரும் தீதின்றி இருக்கின்றீரோ என வினவ, அழிதகவு உள்ளமொடு அரற்றின்ன் ஆகி - அழிந்த உள்ளத்தோடு புலம்பியவனாய், ஒளியிழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் - ஒள்ளிய அணிகலனையுடைய மனைவியர்க்கு நேர்ந்ததை உரைக்கின்றவன் ;
மாதர் : விளி. செல்வேன் பெயர். கண்டேன் - கண்டு : முற்றெச்சம்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil