Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.11

Maṇimēkalai urai 17.11

Language
Tamil

17.11

ஆதிரை பிச்சையிட்ட காதை

75
ஈங்குநீ வந்த காரணம் என்னென
ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்

72

உரை

79

அவன் ஈங்கு நீ வந்த காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த காரணம் யாது என வினவி, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்-வணிகன் அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண் துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத்தக்கான் ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையன் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என - இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும் கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி கேட்ட சாதுவன் சோர்ந்து கொடுஞ் சொற்களை என் காதிற் கேட்டேன் யான் அவற்றை வேண்டேன் என்றுரைத்தலும் ;

வெங்கள் : வெம்மை - விருப்பம்; வெவ்விய கள்ளுமாம். கொடும்: செய்யுமென்னும் வாய்பாட்டு ஏவல். அயர்ந்து-கவலையுற்று என்றுமாம்.

Linked texts (1)