Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.12

Maṇimēkalai urai 17.12

Language
Tamil

17.12

ஆதிரை பிச்சையிட்ட காதை

80

பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில்
காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத்
தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும்

80

உரை

83

பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் - மாதரும் உணவும் இல்லையானால் மக்கட்கு உலகத்தில் அடையக்கூடிய பயன் உண்டோ, உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என - அங்ஙன முண்டென்றால் அதனை யாங்களும் காண்போம் காட்டுவாயாக என்று, தூண்டிய சினத்தினன் சொல் என - மிக்க சீற்றமுடையனாய்க் கூறுக என, சொல்லும் - சாதுவனுரைக்கும் ;

இன்று என்பது பொதுவினையாய் நின்றது. உறுபயன்-இன்பம். தூண்டிய சினத்தினன் காட்டுவாயாக சொல்க என்று சொல்ல வென்க. சொல்லென என்பதிலுள்ள என என்பது சொல்ல என்னுந் துணையாய் நின்றது.

Linked texts (1)