Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.4

Maṇimēkalai urai 17.4

Language
Tamil

17.4

ஆதிரை பிச்சையிட்ட காதை

20

நாவாய் கேடுற நன்மரம் பற்றிப்
போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர்
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்
சாதுவன் தானும் சாவுற் றானென

17

உரை

21

நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம் அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப் போந்தவர்கள், இடையிருள் யாமத்து ஏறிதிரைப் பெருங்கடல் - மிக்க இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில், உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும் இறந்தனன் என்று கூற ;

சாதுவன் மரத்தைப் பற்றிப் போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு.

Linked texts (1)