Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.5

Maṇimēkalai urai 17.5

Language
Tamil

17.5

ஆதிரை பிச்சையிட்ட காதை

25 ஆதிரை நல்லாள ஆங்கது தான்கேட்டு
ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்
தாரீ ரோவெச் சாற்றினள் கழறிச்
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து
முடலை விறகின் முளியெரி பொத்தி
மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன் என்றவன் புகுதலும்

22

உரை

28

ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி, சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி-சுடுகாட்டில் தோண்டப்பட்ட குழியின்கண் முறுக்குடைய காய்ந்த விறகுகளால் அழலை மூட்டி, மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும் - தீவினையேனது கணவன் வினைப்பயன் செலுத்தச் சென்றவிடத்து யானும் புகுவேன் என்று அத் தீயிடைப் புகுதலும்;

ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. தாரீர் - தருவீர் ; ஓ : புலம்பல் ; தரமாட்டீரோ என்றுமாம். சுடலையாகிய கான் என்க. மிக்க-தீவினை மிகுந்த. மேன்மையுடைய வென்றுமாம்.

Linked texts (1)