Maṇimēkalai's Renunciation 27.13
Maṇimēkalai urai 27.13
- Language
- Tamil
27.13
வஞ்சிமா நகர் புக்க காதை
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.
92
உரை
94
பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மை யும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையா கிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால் வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.
கொடி, வஞ்சிக்கொடி; ¹''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் 'திருந்து நல் ஏது' என்றார். வாய்மை நான்கும் ²மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், 'பொருந்து நால் வாய்மை' எனப்பட்டது. 'நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்' என்பது. அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, 'அருளல் வேண்டும்' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், 'இன்னது இவ் வியல்பு' என எடுத்துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.
¹ மணி. 28 ; 101-2. ² மணி. 2 : 4-7 : 26 : 48.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil