Maṇimēkalai's Renunciation 27
Maṇimēkalai urai 27
- Language
- Tamil
27.1
வஞ்சிமா நகர் புக்க காதை
5
அணியிழை யந்தர மாறா வெழுந்து
தணியாக் காதற் றாய்கண் ணகியையுங்
கொடைகெழு தாதை கோவலன் றன்னையுங்
கடவு ளெழுதிய படிமங் காணிய
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம்பல வேத்தி
அற்புக்கட னில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது
அருளல் வேண்டுமென் ¹றழுதுமுன் னிற்ப
1
உரை
9
அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலைவிசும்பின்வழியாக எழுந்து சென்று வஞ்சி நகரத்தின் புறத்தே இறங்கி, தணியாக் காதல் தாய கண்ணகியையும்-குறையாத அன்புடையளாகிய அன்னை கண்ணகியையும், கொடைகெழுதாதை கோவலன் தன்னையும்-ஈதற்றன்மை மிக்குடையானாகிய தந்தை கோவலனையும், கடவுள் எழுதிய படிமம் காணிய - தெய்வமாக எழுதியமைக்கப்பட்ட வடிவத்தைக் காணும் பொருட்டு, வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து - ஆசை மேன்மேலுந் தூண்டுதலால் அக் கோயிலிற் புகுந்து, வணங்கி நின்று குணம் பல ஏத்தி - வணக்கஞ் செய்து நின்று அவளுடைய சிறந்த குணங்கள் பலவற்றையும் எடுத்துத் துதித்து, அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது - அன்பாகிய கடனிலே நில்லாமலும் நல்ல தவநெறியில் செல்லமாலும், கற்புக் கடன் பூண்டு நுங்கடன் முடித்தது - கற்பினையே கடனாக மேற் கொண்டு நுமது கடனை முடித்ததன் காரணத்தை, அருளல் வேண்டும் என்று அழுது முன்நிற்ப-உரைத்தருள வேண்டும் என்று கூறியழுது கண்ணகி திருமுன் நிற்ப;
எழுந்து என்பதன் பின் அவாய் நிலையால் சில சொற்கள் வருவித் துரைக்கப்பட்டன. கடவுள் எழுதிய-தெய்வமாக இயற்றிய. கோவலன் கொடையில் மேம்பட்டவ னென்பது, தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ வுணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பினியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்தனன் என்பது முதலிய வரலாற்றானறியப்படும். இதனைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையானறிக. படிமம்-படிவம், வடிவம். கண்ணகி கோட்டத்துக் கோவலனுக்குப் படிவம் அமைக்கப்பட்டதென்பது இதனாற்பெற்றாம். அற்புக்கடன்-தலையன்பினால் கணவனிறப்ப உடனறித்தலும் தீப்பாய்தலுமாம். நற்றவம் படர்தலாவது கைம்மை நோன்பைநோற்று உடம்பைவருத்துதல். கண்ணகி கற்பையே கடனாகக் கொண்டவளென்தபனை, ²"கற்புக்கடம் பூண்ட வித்தெய்வமல்லது, பொறைபுடைத் தெய்வம் யாங்கண் டிலமால்" "கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்" என்பவற்றி³னறிக. ஈண்டுக் கற்பென்றது மறக் கற்பினை. நும் கடன் முடித்தது என்றது மதுரையை அழற்படுத்திப் பதினான்காம்நாளிற் கோவலனைச் சென்று கூடியதை உணர்த்திற்று. "அற்புக் கடனில்லாது...முடித்தது" என்பவற்றின் கருத்து ⁴"காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது, இன்னுயி ரீவர் ஈயா ராயின், நன்னீர்ப்பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயினன்பரோ, டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர், பத்தினிப் பெண்டிர்" என, இந்நூலுள் முன்பு வந்திருந்தலால் விளக்கமாம்.
(பாடம்.) ¹றழுது ணிற்ப. ² சிலப். 15: 143-4. ³ சிலப். 29: 'தற்பயந்தாள்.' ⁴ மணி. 2: 42-48.
27.2
வஞ்சிமா நகர் புக்க காதை
10
ஒருபெரும் பத்தினிக் கடவுளாய் குரைப்போள்
எம்மிறைக் குற்ற விடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள்
மதுரா பதியெனு மாபெருந் தெய்வம்
10
உரை
13
ஒரு பெரும் பத்தினிக்கடவுள் ஆங்கு உரைப்போள்-ஒப்பற்ற பெருமையினையுடைய பத்தினிக் கடவுளாகிய கண்ணகி அப்பொழுது கூறுவாள், எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது - என் காதலன் உற்ற கடுந்துன்பத்தைப் பொறாமல், வெம்மையின் மதுரை வெவ்வழல் படுநாள்-யான் சினத்தினால் மதுரை நகரைக் கொடிய எரிமூட்டிய நாளில், மதுராபதி எனும் மாபெருந்தெய்வம் - மதுராபதி யென்று கூறப்படும் மதுரையின் அதிதேவதையாகிய பெரிய தெய்வம் தோன்றி"
இடுக்கண் - துன்பம்" ஈண்டுக் கொலை. வெம்மை - வெகுளி. அழற்படுநாள் - அழற்படுத்து நாளில்" படுதல்: பிறவினைப் பொருட்டு- 'எம்மிறைக்கு' என்பது முதலியன கண்ணகி கூற்று.
27.3
வஞ்சிமா நகர் புக்க காதை
15
20
25
இதுநீர் முன்செய் வினையின் பயனால்
காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத்
தாய மன்னவர் வசுவுங் குமரனும்
சிங்க புரமுஞ் செழுநீர்க் கபிலையும்
அங்காள் கின்றோ ரடற்செரு வுறுகாள்
மூவிரு காவத முன்னுந ரின்றி
யாவரும் வழங்கா விடத்திற் பொருள்வேட்டுப்
பல்கலன் கொண்டு பலரறி யாமல்
எல்வளை யாளோ டரிபுர மெய்திப்
பண்டக் கலம்பகர் சங்கமன் றன்னைக்
கண்டனர் கூறத் தையனின் கணவன்
பார்த்திபன் றொழில்செயும் பரத னென்னும்
தீத்தொழி லாளன் றெற்றெனப் பற்றி
ஒற்ற னிவனென வுரைத்து மன்னற்குக்
குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன்
14
உரை
28
இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க நன்னாட்டு - குற்றமற்ற மலர்சோலைகளையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியராகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமையினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்;
இது நீர்' என்பது முதலியன, மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும். பயனால்: ஆல்: அசை. 'வினையின் பயன்' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின் அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார் என நிரனிறையாகக்கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம். பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென - விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன்.
27.4
வஞ்சிமா நகர் புக்க காதை
30
ஆங்கவன் மனைவி யழுதன ளரற்றி
ஏங்கிமெய் பெயர்ப்போ ளிறுவரை யேறி
இட்ட சாபங் கட்டிய தாகும்
உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
29
உரை
34
ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள் இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்டசாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங்கொண்டு செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்; மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; ¹''இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'' என்பது காண்க. உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந் தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு ² ''கடிபொழி லுடுத்த கலிங்கநன் னூட்டு, வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்...வழுவில் சாபம்பட்டனிர்'' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும் நன்கறியப்படும்
¹ சீவக. 1833. ² சிலப். 23 : 138-70.
27.5
வஞ்சிமா நகர் புக்க காதை
35
40
45
50
மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானு மெய்துத லொழியாது
உம்ப ரில்வழி யிம்பரிற் பல்பிறப்பு
யாங்கணு மிருவினை யுய்த்துமைப் போல
நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்து மிறந்து முழல்வோம் பின்னர்
மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு
ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும்
தரவரும் பெருமைக் கபிலையம் பதியின்
அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துத்
துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப்
போதி மூலம் பொருந்திவந் தருளித்
தீதறு நால்வகை வாய்மைந் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை யெல்லா மழிவுறு வகையும்
இற்றென வியம்பிக் குற்றவீ டெய்தி
எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும்
அண்ண லறக்கதிர் விரிக்குங் காலைப்
35
உரை
53
மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம் - முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம். அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின் முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது, உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து-உம்பருலகினில் நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின்கண்ணும் இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப்போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற்கரிய பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும் மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும் மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல் வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய பெருமையையுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்து-அளத் தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி-அசைவற்ற புத்தினாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி - அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து - தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன் னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக்கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும் 'வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது;
விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க.அடு சினப் பாவம்-மதுரையை அழித்த சினமாகிய பாவம்; ¹''தன்னையே கொல்லுஞ் சினம்'' என்பவாகலின் அடு சினம் எனப்பட்ட தென்றலுமாம். இருவினை உய்த்து - இருவினையாற் செலுத்தப்பட்டு. திலகம் - திலகம் போல்வது; மேலாயது. கபிலை - கபிலைநகர்; மகதநாட்டின் தலைநகர்; கபிலர் எனப் பெயரிய முனிவரொருவர் முன்பு தவஞ் செய்தற்கு இடமாயிருந்தமையின் இப்பெயர் பெற்றதென்பர். இது கபில வஸ்து எனவும் வழங்கும். பாரமிதை - கரையை அடைவதற்குரியது; பாரம் - கரை; வீடுபேறாகிய கரையை அடைதற்குரிய தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள்., வலி, ஞானம் என்னும் பத்தும் நிரம்பப் பெறுதல். இவை ஒவ்வொன்றும் தானபாரமிதை முதலிய பெயர்களால் வழங்கும். இவை தசபாரமிதை யெனவும், தசபாரமெனவும் கூறப்படும். ²''தானஞ் சீலம்பொறை தக்கதாய வீரியம், ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும், மானமில் லருளினை வைத்தலேவ லிம்மையும், ஞானமீரைம் பாரமிதை நாடுங்கா லிவைகளும்'' ³''தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி, ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே'' என்பன காண்க. போதி - அரசமரம்; என்றது மாபோதியை. நால் வகை வாய்மை - துயரம், துயரத் தோற்றம், துயர நீக்கம், துயர நீக்க நெறி என்பன. பன்னிரு சார்பு - ⁴''பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்'' என்பன. இற்று என்பதனைத் தோற்றத்தோடும் வகை யோடும் தனித்தனி கூட்டுக. அண்ணல் - தலைமை. புத்தனை ஞாயிறாக உருவகித்ததற்கேற்ப அவன் அறிவுறுத்தும் அறங்களைக் கதிராகs உருவகஞ் செய்தார். புத்த ஞாயிறு நிறைத்துத் தோன்றி வந்தருளித் தெரிந்து இயம்பி எய்தி விரிக்குங்காலை யென்க.
¹குறள். 305: ² நீல. மொக்கல. 88.
³ வீர. யாப்பு. 11-உதாரணம். ⁴மணி. 24 : 105-7.
27.6
வஞ்சிமா நகர் புக்க காதை
55
பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகார மேழுமேத் துதலின்
துன்பக் கதியிற் றோற்றர வின்றி
அன்புறு மனத்தோ டவன்றங் கேட்டுத்
துறவி யுள்ளந் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றிய மாகுவம்
54
உரை
59
பைந்தொடி தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் - நின் தந்தையுடனே யான் புத்தனது இந்திர விகாரங்கள் ஏழனையும் வணங்கித் துதித்த நல்வினையினாலே, துன்பக் கதியில் தோற்றரவு இன்றி - இன்னல் தரும் இழி பிறப்பிலே தோன்றுதலின்றி, அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு - அன்பு மிகுந்த உள்ளத்துடன் புத்தனது அறவுரைகளைக் கேட்டு, துறவி உள்ளம் தோன்றி - உள்ளத்தே துறவு தோன்றி, தொடரும் பிறவிநீத்த பெற்றியம் ஆகுவம் - தொடர்ந்து வரும் பிறவியை நீக்கிய இயல்பினை யுடையேமாவேம்;
பைந்தொடி முன்னிலைப் பெயர். பகவன் - புத்தன். விகாரம் - கையாற்செய்யப்படாது நினைவினால் ஆக்கப்பட்டது. இந்திர விகாரம்- ஏழு - காவிரிப்பூம் பட்டினத்திலே இந்திரனால் நிறுமிக்கப்பட்ட ஏழ் அரங்குகள்; விசும்பிலியங்குவோராகிய சாரணர் இருந்து, பௌத்தா கமப் பொருளை யாவர்க்கும் அறிவுறுத்துதற்கு இடமாக இருப்பவை; இதனை ¹''பணையைந் தோங்கிய பாசிலைப் போதி, அணிதிகழ் நீழ லற வோன் றிருமொழி, அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும், இந்திர விகார மேழுடன் போகி'' என்பதனால் உணர்க. 'ஏத்துதலின்' என ஈண்டுக் கூறியதனால், கோவலனும் கண்ணகியும் புகார்நகரி லிருந்தபொழுது இவற்றை வழிபட்டார்களென்பது போதரும். தோற்றரவு - தோன்றுதல்; தொழிற்பெயர்; துன்பக் கதியில் தோன்றுதலின்றி என்பதனால் நற்கதியிற் பிறத்தல் பெற்றாம். துறவி - துறவு; திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில் பேராசிரியர் ²''துறவு துறவியென நின்றாற் போல அளவு அளவியென நின்றது'' என எழுதியுள்ளமை காண்க. பெற்றி யென்றது நிருவாணத்தை.
¹ சிலப். 10 : 11-4. ² திருச்சிற். 10.உரை.
27.7
வஞ்சிமா நகர் புக்க காதை
60
அத்திற மாயினு மநேக காலம்
எத்திறத் தார்க்கு மிருத்தியுஞ் செய்குவம்
60
உரை
61
அத்திறமாயினும் அநேக காலம் எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் - அவ்வாறு ஆவேமாயினும் பல காலங்கள் எவ் வகைப்பட்டோர்க்கும் சித்தியும் செய்வோம்; இருத்தி - சித்தி.
இதனை ரிதி யென்றும், இது பரிணாமிகம், நிருமாணிகமென விருகைத்தென்றும், ஒவ்வொன்றும் முறையே பதினாறும் இரண்டுமாய் விரியுமென்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன.
27.8
வஞ்சிமா நகர் புக்க காதை
65
நறைகமழ் கூந்த னங்கை நீயும்
முறைமையி னிந்த மூதூ ரகத்தே
அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு
மெய்வகை யின்னும் நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய்
இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும்
62
உரை
67
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங் கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின் இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண் முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு - சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் - அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினைக்கே விளங்கிய பின், பெரியோன் பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக் கடவாயாவாய், இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து உரைத்தலும் - தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்;
மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. பிடகம் - பௌத்தாகமம்; இது வினயம், சூத்திரம், சாத்திரம் என மூவகைப்படுதலின் திரிபிடகம் எனவும் படும். மூன்றுள் ஒவ்வொன்றும் பல பகுதிகளை யுடையதாம்.
27.9
வஞ்சிமா நகர் புக்க காதை
70
75 இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும்
விளைபொரு ளுரையோர் வேற்றுருக் கொள்கென
மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த
மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்த்
தேவ குலமுந் தொற்றியும் பள்ளியுன்
பூமலர்ப் பொழிலும பொய்கையு மிடைந்து
நற்றவ முனுவருங் கற்றடங் கினரும்
நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்
எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கையில்
68
உரை
76
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்றுருக் கொள்க என - இவள் இளமை யுடைய வளை யணிந்த பெண்ணாவாள் என்று நினக்கு யாவரும் தம் சமய உண்மைகளைக் கூறார் ஆதலின் நீ வேற்றுருவங் கொள்க என்று, மையறு சிறப்பின் தெய்வதம் தந்த-களங்கமற்ற சிறப்பினை யுடைய மணிமேகலா தெய்வங் கொடுத்த, மந்திரம் ஓதி ஓர் மாத வன் வடிவாய் - மந்திரத்தை ஓதி ஒரு தாபதன் வடிவாகி, தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-கடவுளர் கோயிலும் வேதிகையும் சாலையும் அழகியபூஞ் சோலையுங் வாவியும் நெருங்கி, நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்- நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும், நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்-அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க புலவரும், எங்கணும் விளங்கிய-எங்கும் இருந்து விளங்கிய, எயிற்புற இருக்கையில் - புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய;
மந்திரம் - வேற்றுருவெய்துவிக்கும் மந்திரம். குலம் - கோயில். பள்ளி - சாலை; இதனைத் ¹''திணிமணற் புதுப்பூம் பள்ளி'' என்னும் புறநானூற்றினுங் காண்க. மறுமை கருதித் தவஞ் செய்தலைத் தவம் என்றும், வீடு கருதிச் செய்தலை நற்றவம் என்றும் வழங்குதல், ²''நற்றவஞ் செய்வார்க்கிடம் தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்'' என்னுஞ் சிந்தாமணியினாற் பெறப்படுதலின், ஈண்டு 'நற்றவ முனிவர்' என்று விதந்தது பயன் கருதாது தவம் முயலும் முனிவரரை என்க. தேவ குலம் முதலியன மிடைந்து முனிவர் முதலியோர் விளங்கிய இருக்கை என்பது.
¹ புறம். 33. ² சீவக: 76.
27.10
வஞ்சிமா நகர் புக்க காதை
செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்
77
உரை
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் - செங்குட்டுவன் என்னும் செங்கோலரசனாகிய சேரர் பெருமானும்;
செங்குட்டுவன், பெயர்; இவன், ஆசிரியர் இளங்கோவடிகளின் தமையனும் வஞ்சிமாநகரிற் கண்ணகி படிமம் நிறுவியோனுமாவன்.
27.11
வஞ்சிமா நகர் புக்க காதை
80
85
90 பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய
நிலநா டெல்லைதன் மலைநா டென்னக்
கைம்மலைக் களிற்றனந் தம்முண் மயங்கத்
தேரு மாவுஞ் செறிகழன் மறவரும்
கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக்
கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி
வங்க நாவியி னதன்வடக் கிழிந்து
கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்
78
உரை
90
பூவா வஞ்சியில் - பூவல்லா வஞ்சியாகிய நகரத்தில், பூத்தவஞ்சி போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய-போர் வினையை மேற்கொண்ட சேனைகளை வஞ்சிப்பூவைத் தமது முடியிலே சூட, நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்க-செல்லும் நிலத்தின்கண் உள்ள நாடுகளின் பரப்பு முழுதும் தனது மலைநாடென்று தோற்றும்படி துதிக்கையைப் பொருந்திய மலைகளைப் போன்ற யானைகள் தம்முள் ஒருங்கு சேர்ந்து செல்ல, தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலின் கலிகொள - தேருங் குதிரையும் நெருங்கிய வீரக்கழ லணிந்த வீரரும் முகிலுடன் கூடிய கடல்போல முழங்க, கடைஇ- அவற்றைச் செலுத்தி, கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி- கங்கைப் பெருநதியின் அடைகரையில் தங்கி, வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-வங்கம் என்னும் ஒருவகை மரக்கலத்தின் உதவியால் அந்நதியின் வடகரையில் இறங்கி, கனகவிசயர் முதற் பல வேந்தர் அனைவரை வென்று - கனகன் விசயன் முதல் உத்தரன் விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலராகிய அனைவரையும் வென்று, அவர் அம்பொன் முடிமிசை - அவர்களுடைய அழகிய பொன்முடி யணிந்த தலைமீது, சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - கொடுமுடி உயர்ந்து பெரிய இமய மலையினின்றும் வெட்டி யெடுத்த, தெய்வக் கல்லும்-தெய்வப் படிமம் அமைத்தற்குரிய கல்லையும், தன் திரு முடி மிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் - தனது அழகிய முடியின் மீது தனது வெற்றியின் அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட வாகை மலரையும் வைத்த சேரனும்;
இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. 'செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. ¹''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும். சேரன் செங்குட்டுவன் வடக்கே போர்மேற் சென்ற வழியிலிருந்த நாடுகளின் பரப்புகள், அவன் சேனையிலிருந்த மலை போன்ற பெரிய யானைகளின் கூட்டம் அங்கங்குந் திரண்டு சென்றபோது அவன்றன் மலைநாடுபோற்றோன் றின வென்க. அடைகரை - வெள்ளத்தால் மணல் அடைந்த கரை. வங்க நாவி: இருபெயரொட்டு. பல வேந்தரென்றது, கனகன் விசயன் என்பாரொடு கூடிச் செங்குட்டுவனை எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய ஆரிய அரசர் பலரை. அனைவரை என்றார், அவரனைவரையும் சேரன் ஒருங்கு வென்றமையின் ; உம்மை விரித்துக் கொள்க. 'அம் பொன் முடிமிசை' என்ற விடத்துப் பொன் ஆகு பெயர். வாகை - வாகைமலர்; போரில் வெற்றி பெற்றோர் அதற்கு அறிகுறியாக அந்நேரத்திற் சூடும் மலர். அரசர் அதனைப் பொன்னாற் செய்து அணிந்து கொள்வ ராதலின், 'செய் பொன் வாகை' எனப்பட்டது. அவரம்பொன் முடிமிசைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்' என்க. சேரன் செங்குட்டு வனது இவ் வெற்றி வரலாற்றைச் சிலப்பதிகாரத்தின் கால்கோட் காதை நீர்ப்படைக் காதைகளால் அறிக.
¹ சிலப். 26: 50-1.
27.12
வஞ்சிமா நகர் புக்க காதை
விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
91
உரை
வில்திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்வலியை விரும்பி னோனாகிய செங்குட்டுவனது புகழ் விளங்குமாறு,
திறல் - வலி; வெய்யோன் - விரும்பினோன் ; ¹''வெற்றி விறல் வெய்யோன்'' என்றார் புறப்பொருள் வெண்பாமாலையினும்.
¹ புறப் - வெ. 68.
27.13
வஞ்சிமா நகர் புக்க காதை
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.
92
உரை
94
பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மை யும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையா கிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால் வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.
கொடி, வஞ்சிக்கொடி; ¹''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் 'திருந்து நல் ஏது' என்றார். வாய்மை நான்கும் ²மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், 'பொருந்து நால் வாய்மை' எனப்பட்டது. 'நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்' என்பது. அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, 'அருளல் வேண்டும்' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், 'இன்னது இவ் வியல்பு' என எடுத்துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.
¹ மணி. 28 ; 101-2. ² மணி. 2 : 4-7 : 26 : 48.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil