Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 27.9

Maṇimēkalai urai 27.9

Language
Tamil

27.9

வஞ்சிமா நகர் புக்க காதை

70

75 இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும்
விளைபொரு ளுரையோர் வேற்றுருக் கொள்கென
மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த
மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்த்
தேவ குலமுந் தொற்றியும் பள்ளியுன்
பூமலர்ப் பொழிலும பொய்கையு மிடைந்து
நற்றவ முனுவருங் கற்றடங் கினரும்
நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்
எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கையில்

68

உரை

76

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்றுருக் கொள்க என - இவள் இளமை யுடைய வளை யணிந்த பெண்ணாவாள் என்று நினக்கு யாவரும் தம் சமய உண்மைகளைக் கூறார் ஆதலின் நீ வேற்றுருவங் கொள்க என்று, மையறு சிறப்பின் தெய்வதம் தந்த-களங்கமற்ற சிறப்பினை யுடைய மணிமேகலா தெய்வங் கொடுத்த, மந்திரம் ஓதி ஓர் மாத வன் வடிவாய் - மந்திரத்தை ஓதி ஒரு தாபதன் வடிவாகி, தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-கடவுளர் கோயிலும் வேதிகையும் சாலையும் அழகியபூஞ் சோலையுங் வாவியும் நெருங்கி, நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்- நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும், நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்-அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க புலவரும், எங்கணும் விளங்கிய-எங்கும் இருந்து விளங்கிய, எயிற்புற இருக்கையில் - புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய;

மந்திரம் - வேற்றுருவெய்துவிக்கும் மந்திரம். குலம் - கோயில். பள்ளி - சாலை; இதனைத் ¹''திணிமணற் புதுப்பூம் பள்ளி'' என்னும் புறநானூற்றினுங் காண்க. மறுமை கருதித் தவஞ் செய்தலைத் தவம் என்றும், வீடு கருதிச் செய்தலை நற்றவம் என்றும் வழங்குதல், ²''நற்றவஞ் செய்வார்க்கிடம் தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்'' என்னுஞ் சிந்தாமணியினாற் பெறப்படுதலின், ஈண்டு 'நற்றவ முனிவர்' என்று விதந்தது பயன் கருதாது தவம் முயலும் முனிவரரை என்க. தேவ குலம் முதலியன மிடைந்து முனிவர் முதலியோர் விளங்கிய இருக்கை என்பது.

¹ புறம். 33. ² சீவக: 76.

Linked texts (1)