Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.31

Maṇimēkalai urai 30.31

Language
Tamil

30.31

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

175 அப்பிர சித்த விசேடிய மாவ
தெதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி
யிருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான்
என்றா லவன நான்ம வாதி
ஆதலிற் றன்மி யப்பிர சித்தம்

173

உரை

178

அப்பிரசித்த விசேடியமாவது-அப்பிரசித்தவிசேடியமென்னுங் குற்றமாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தமின்றி இருத்தல்- எதிரியாகிய பிரதிவாதிக்குப் பக்கவசனத்து எழுவாயாகிய தன்மி தெரியாததா யிருத்தலாம்; சாங்கியன் - ஆன்மவாதியாகிய சாங்கியன்; மாறாய்நின்ற பௌத்தனைக் குறித்து-மாறுபட்டு நிற்கும் பிரதி வாதியாகிய பௌத்தனை நோக்கி; ஆன்மா சைதன்னியவான்என்றால் ஆன்மா சித்துப் பொருளென்று சொல்வானானால்; அவன் அநான்மவாதி யாதலின் - அப் பௌத்தன் ஆன்மாவென்பதொன்றில்லை யென்னும் வாதியாகையால்; தன்மி அப்பிரசித்தம் - தன்மி பிரதிவாதிக்குப் பிரசித்தமில்லாத தென்னும் குற்றமாயிற்று எ - று.

பக்க வசனத்தின் சாத்திய தன்மத்தை விசேடணமென்றும், தன்மியை விசேடியமென்றும் வழங்குவதுண்மை தோன்ற, அப்பிரசித்த விசேடணமென்றும் அப்பிரசித்த விசேடியமென்றும் உரைக்கின்றார். தன்மியே தெரியாதபோது அதன்பா லுண்டெனச் சாதிக்கப்படும்சாத்திய தன்மம் பிரதிவாதிக்கு விளங்காதாகலின், இம் மேற்கோள்குற்றத் தின்பாற் படுவதாயிற்றென்பர். சாங்கியன் ஆன்மாவென்றொருபொருள் ண்டென்பதை, "மனோபுத்தி யாங்காரசித்தம், உயிரெனுமான்மா வொன்றொடுமாம்" (மணி. 27: 238-9) என்று (சாங்கியன்) கூறுமாற்றாலறிக. சாங்கியகாரிகை முதலிய நூல்களிலும் ஆன்மாவுண்மை வற்புறுத்தப்படுகிறது. நீலகேசி "மன்னுயிர்" (735) என்றும், சிவஞானசித்தியார், "சுத்த புருடன்" (நிரீசுர சாங்கியன். 1) என்றும் இக் கருத்தைத் காட்டுமாறு காண்க. ஐவகைக் கந்தங்கட்கு வேறாக ஆன்மா வென்ப தொன்றில்லை யென்பர் பௌத்தர்; இதனைச் சத சஹஸ்ரிக பிரஞ்ஞை பாரமிதை யென்னும் நூலில் முதல் பன்னிரண்டு அதிகாரங்களுள் வற்புறுத்துமாறு காண்க. இனி இவ் வப்பிரசித்த விசேடி யத்தைப்பற்றிக் கூறலுற்ற நியாயப் பிரவேசம் பௌத்தனை நோக்கிச் சாங்கியனொருவன் ஆன்மா வறிவுடைப் பொருளென்று சொல்வது அப்பிரசித்த விசேடிய மென்பதுபடக் கூறுகிறதேயன்றி இலக்கணமொன்றும் கூறிற்றிலது.

Linked texts (1)