Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.32

Maṇimēkalai urai 30.32

Language
Tamil

30.32

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

180

185
அப்பிர சித்த வுபய மாவது
மாறா னோற்குத் தன்மி சாத்தியம
ஏறா தப்பிர சித்தமா யிருத்தல்
பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்
சுகமுத லியதொகைப் பொருட்டுக் காரணம்
ஆன்மா வென்றாற் சுகமுமான் மாவுந
தாமிசை யாமையி லப்பிரசித் தோபயம்

179

உரை

185

அப்பிரசித்த வுபயமாவது - அப்பிரசித்த வுபயமென்னுங் குற்றமாவது;மாறானோற்குத் தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் - எதிரியாகிய பிரதிவாதிக்கு வாதி கூறும் பக்க வசனத்துப் பொருளின் சாத்தியதன்மம் விளக்கமின்றி யுணரப் படாததா யொழிவது; பகர் வைசேடிகன்-வாதியாய் நின்று பக்க வசனங்கூறும் வைசேடிகன்; பௌத்தனைக் குறித்து - பிரதிவாதியாகும் பௌத்தனை நோக்கி; சுக முதலிய தொகைப் பொருட்கு ஆன்மா காரணம்-சுகம் துக்கம் இச்சை முதலியவாகக் கூறப்படும் தொகைப்பொருட்கு ஆன்மாவே காரணமாம்; என்றால் - என்று சொல்வானாயின்; ஆன்மாவும் சுகமும் தாம் இசையாமையில் - ஆன்மாவைத் தன்மியென்றும் சுக முதலியன அதன் தன்மமென்றும் தாங்கள் கொள்வதில்லாமையால்; அப் பிரசித் தோபயம் - தன்மியாகிய விசேடியமும் தன்மமாகிய விசேடணமுமாகிய இரண்டும் பிரசித்தமில்லாமை யென்னும் குற்றமாம் எ - று.

அப்பிரசித்தம், விளக்கமின்மை; உபயம் விசேடண விசேடியமாகிய இரண்டு. விசேடண விசேடியமிரண்டும் தனித்தனியே அப்பிரசித்தமாகிய வழி, அவை முறையே அப்பிரசித்த விசேடணமென்றும் அப்பிரசித்த விசேடியமென்றும் வருமென்றவர், பக்க வசன மொன்றின்கண் விசேடண விசேடியமிரண்டும் ஒருங்கே பிரசித்தமில்லாத வழி, அப்பிர சித்த வுபயமாம் என்பது இதனாற் கூறியவாறு. வாதியொடு மாறுபடுதலால் பிரதிவாதி மாறானோன் என்று கூறப்படுகின்றான். விசேடண விசேடிய மிரண்டும் தன் சமய நூல்களில் கூறப்படாதனவாதலின் பிரதிவாதி மனதில் கொள்ளப்படாமைபற்றி, ''ஏறாது'' என்றும் ''அப்பிரசித்தமாயிருத்த'' லென்றும் கூறல் வேண்டிற்று. முன் மொழி பவன் வாதியாதலின், வைசேடிகனாகிய வாதியைப் ''பகர் வைசேடிகன்'' என்று விசேடித்தார். தொகைப்பொருளெனப்பட்டவை ''சுகம் துக்கம் இச்சை வெறுப்பு முயற்சி அறம் மறம் என்பன; இவை வைசேடிகரால் ஆன்மாவின்கண் நிகழும் காரியமாகிய குணங்களென்று கொள்ளப் பட்டன''¹ என்பர் திரு. நாராயணையங்கார். சுகமும் துக்கமும் விருப்பும் வெறுப்பும் முயற்சியும் அறிவும் ஆன்மாவின் குணங்களென வைசேடிக ருரைப்ப² ஈண்டுக் கூறிய சுக முதலிய தொகைப்பொருட்குக் காரணம் ஆன்மாவென்னுங் கூற்றைப் பல ஏதுக்களைக் காட்டி மறுப்பர் ³ சாந்த ரக்ஷிதர். இனி, நியாப் பிரவேசமுடையார், இந்த அப்பிரசித்த வுபயத்துக்கு இலக்கணங் கூறாராயினும், ஆன்மா சுக முதலியவற்றுக்குச் சமவாயி காரணமென்று வைசேடிகன் பொளத்தனை நோக்கிக் சொல்வது அப்பிரசித்த வுபயமெனப்படும் என்ற இதனையே மொழிபெயர்த் துரைக்கின்றார். ஆன்மாவைப்பற்றி வைசேடிகர் கூறுவது நையாயிகர்க்கும் உடன்பாடாதலின், பின் வந்த சாந்தரக்ஷிதர் நையாயிகரை முன்னிலைப்படுத்து மறுப்பு நிகழ்த்துகின்றார்.

¹ செந்தமிழ் Vol, XXXii. P. 159. ² வை, சூ. v. 1, 2 & 3. ³ தத்துவ சங்கிரகம் Vol. I Chap. VII. 4. 217, 218, 219.

Linked texts (1)