Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.40

Maṇimēkalai urai 30.40

Language
Tamil

30.40

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

215 தன்மி யசித்த மநைகாந் திகமுஞ
சாதா ரணமசா தாரணஞ் சபக்கைக
தேச விருத்தி விபக்க வியாபி
விபக்கைக தேச விருத்தி சபக்க
வியாபி யுபயைக தேச விருத்தி
விருத்த வியபி சாரியென் றாறு

211

உரை

216

அநைகாந்திகமும் - அநைகாந்திக மென்னும் ஏதுப் போலியும்; சாதாரணம்...என்றாறு - சாதாரணமென்றும் அசாதாரண மென்றும் சபக்கை தேச விருத்தி விபக்க வியாபியென்றும் விபக்கைக தேச விருத்தி சபக்க வியாபியென்றும் உபயைகதேச விருத்தி யென்றும் விருத்த வியபிசாரியென்றும் ஆறுவகைப்படும் எ - று.

சாத்தியதன்மத்தைத் துணிவித்தற்கு வந்த பக்கதன்மவசனம் வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதனமாய்ப் பஃறலையான முடிபுகோடற் கிடந்தருவது அநைகாந்திகமென்பதாம். அநேக அந்தத்தைக் கொள்வது அநைகாந்திக மெனவறிக. நையாயிகர் இதனைச் சாதாரணம் அசாதாரணம் அனுபசங்காரி என மூன்று வகையாகப் பகுத்துக் கூறவர். இம்மணிமேகலையாசிரியர் கூறிய இவற்றையே நியாயப் பிரவேசம் பிரமாண சமுச்சயம்¹ என்ற நூல்களையுடையாரும் மேற்கொண்டு கூறுகின்றார். ஏனை வைசேடிகர் முதலாயினார் சந்தித்த வேதுவா பாசமென்பது இவ்வநைகாந்திக வேதுப் போலிக்கண் அடங்குமென்ப.

¹ Fragments from Dinnaga. P. 29-33.

Linked texts (1)