Maṇimēkalai's Renunciation 30.67.8
Maṇimēkalai urai 30.67.8
- Language
- Tamil
30.67.8
விபரீத வெதிரேகமாவது - விபரீத வெதிரேகமென்னும் திட்டாந்தப் போலியாவது; பிரிவைத் தலை தடுமாறாச் சொல்லுதல்- விபக்கத்து வெதிரேக வியாத்தி வசனத்தைத் தலைதடுமாறச் சொல்லுவதாம் ; சத்தம் நித்தம் மூர்த்தமாதலின் என்றால் சத்தம் நித்தமாம் மூர்த்தமாகையால் என்று சாத்திய சாதன வசனமான பக்கத்தைக் கூறினால்; என்று நின்றவிடத்து என்று இவ்வாறுநின்றதற்கு விபக்க வெதிரேக வியாத்தி கூறுமிடத்து; யாதோரிடத்து நித்தமுமில்லை அவ்விடத்து மூர்த்தமுமில்லை யெனாது - யாதொரு பொருளிடத்து நித்தத்துவ மில்லையோ அப் பொருளிடத்து மூர்த்தத்துவமும் இல்லையாம் என்று சொல்லாமல் ; யாதோரிடத்து மூர்த்தமும் இல்லை அவ்விடத்து நித்தமும் இல்லை யென்றால் - யாதோர் பொருளிடத்து மூர்த்தத்துவமில்லையோ அப் பொருளிடத்தே நித்தத்துவமுமில்லையெனத் தடுமாறிச் சொன்னால்; வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க-வெதிரேக திட்டாந்தம் மாறுபட்டுக் குற்றமாமெனக் கொள்வாயாக எ - று.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil