Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.67.9

Maṇimēkalai urai 30.67.9

Language
Tamil

30.67.9

பக்கத்தின் மறுதலையான விபக்கத் தொடர்ச்சியை மீட்சியென வழங்குதலின், அதற்கேற்ப, அதன் வியாத்தி வசனத்தைப் பிரிவென்றார். பக்கத்தைப் புலப்படக் கூறினாலன்றி விபக்கம் பெறப்படாமை பற்றி, ''சத்தம் நித்தம் மூர்த்தமாதலினென்றால்'' என்றார். இனி, வழுவின்றிக் கூறற்பாலதாகிய விபக்க வியாத்தி வெதிரேக வசனம் இஃதென்பார், "யாதோரிடத்து நித்தமும் இல்லை அவ்விடத்து மூர்த்தமும் இல்லை' யென்றும், இவ்வாறு கூறாது தலைதடுமாறிக் கூடும் தவறாய முறையைக்காட்டற்கு, ''யாதோரிடத்து மூர்த்தமுமில்லை அவ்விடத்து நித்தமுமில்லை''யென்றும்,இக் கூற்று விபரீத வெதிரேகமாம் என்பார், ''வெதிரேகம் மாறு கொள்ளுமெனக் கொள்க" என்றும் கூறினார். வெதிரேகக் கூற்றை மாறுகொளக் கூறுதலின் விபரீ தமாமென வறிக. என்றால், என்றால் மாறுகொள்ளும் என இயைத்து, மூர்த்தமாதலின் என்றால் அதற்குரிய வியாத்தி வசனத்தை...என்று தடுமாறிச்சொன்னால் மாறுகொள்ளும் என்றவாறா மென்க.

Linked texts (1)