Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.49

Maṇimēkalai urai 31.49

Language
Tamil

31.49

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

245

வினாவின் விடுத்தன் முட்டை முந்திற்றோ
பனைமுந் திற்றோ வெனக்கட் டுரைசெய்
என்றா லெம்முட்டைக் கெப்பனை யென்றல்

244

உரை

246

வினாவின் விடுத்தல் - வினாவெதில் வினாவி விடையிறுத்தலாவது ; முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ எனக் கட்டுரை செய் என்றால் - முட்டையாகிய விதை முந்தியதோ பனை முந்தியதோ இன்னது முந்தியது என விடையிறுக்க என்று ஒருவன் வினாவினால்; எம்முட்டைக்கு எப்பனை என்றல்-எந்த முட்டைக்கு எந்தப் பனை காட்டுக என விடையிறுத்தலாம் எ - று.

பனையின் விதையை முட்டை யென்றல் வழக்கு. பனைவிதையின் கூடு கொண்டு எண்ணெய் விற்பார் அதனை முட்டை யென்று வழங்குமாறு காண்க. முட்டையைக் காட்டியவழி, அதனைப் பயந்த பனை முந்திற்றாதலும், பனையைக் காட்டியவழி முட்டை முந்தியதாதலும் இனிது விளங்குதலின், எதிர் வினாவும் விடையாதல் கண்டு, "வினாவின் விடுத்தல்" என்றார். "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (சொல். 14) என்பது தொல்காப்பியம். தெய்வச்சிலையாரும் இதுவே கூறினர்.

Linked texts (1)