Maṇimēkalai's Renunciation 31.50
Maṇimēkalai urai 31.50
- Language
- Tamil
31.50
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
வாய்வா ளாமை யாகா யப்பூப்
பழைதோ புதிதோ வென்று புகல்வான்
உரைக்கு மாற்ற முரையா திருத்தல்
247
உரை
249
வாய் வாளாமை - ஒன்றும் விடை கூறாதொழிதலாவது ; ஆகாயப்பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு-ஆகாயப் பூ பழமையானதோ புதியதோ என்று கேட்க விரும்புவோன் வினாவிற்கு ; மாற்றம் உரையாதிருத்தல் - விடையொன்றும் கூறாதொழிதலாம் எ -று.
ஆகாயத்தில் பூ இல்லாமையின், அது இல் பொருளாதலின் அதனைக் குறித்து வினாதலும் விடுத்தலும் பயனில மொழிதலாய்க் குற்றம் பயத்தலின், வாய் வாளாமை வேண்டுவதாயிற்று. தெய்வச் சிலையாரும் "ஆகாயப் பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை" யென்றார். விடை யொன்றும் கூறாது அவனோடு வேறு உரையாடலும் கூடாதென்றற்கு, "மாற்றம்" என்றும், அவன் பயனில் சொல் பாராட்டுவோ னென்பார், "புகல்வோன்" என்றும் கூறினார்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil