Maṇimēkalai's Renunciation 4.2
Maṇimēkalai urai 4.2
- Language
- Tamil
4.2
மலர்வனம் புக்க காதை
5
10
தந்தையும் தாயுந் தாநனி யுழந்த
வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை
மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்
புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட
5
உரை
10
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த - தன் தந்தை தாயரான கோவலனும் கண்ணகியும் உற்று மிக வருந்திய, வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-கொடிய துயரினை விளைக்கும் துன்ப மொழிகள் காதினுள்ளே சுட, காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை - மணிமேகலை அவர்பால் அன்பு மிக்க உள்ளங் கலக்க முற்று, மாதர் செங்கண் வரி வனப்பு அழித்து - அழகிய சிவந்த கண்களில் மை எழுதின அழகினைச் சிதைத்து, புலம்பு நீர் உருட்டி-வருத்தத்தா லுண்டாகிய கண்ணீரை உதிர்த்து, பொதி அவிழ் நறுமலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட - கட்ட விழ்ந்து விளங்குகின்ற இதழ்களையுடைய நறிய மலர் மாலையின் மீது வீழ்த்தி அதனை நீராட்ட ;
இடும்பை-மாதவி கூறிய துன்ப மொழிகள், மாதர்-காதல் ; ஈண்டு அழகு. வரு-மையெழுதிய கீற்று; ¹"வரிவனப் புற்ற" என்பது புறம். புலம்புநீர்-தனித்து வீழ்கின்ற நீர்த் துளியுமாம். நீராட்ட - நனைக்க என்றபடி.
1 புறம். 3.3
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil