Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4

Maṇimēkalai urai 4

Language
Tamil

Contents

4.1

மலர்வனம் புக்க காதை

வயந்த மாலைக்கு மாதவி யுரைத்த
உயங்குநோய் வருத்தத் துரைமுன் றோன்றி
மாமலர் நாற்றம் போன்மணி மேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின்

1

உரை

4

வயந்த மாலைக்கு மாதவி உரைத்த - வயந்த மாலையினிடம் மாதவி கூறிய, உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி - பிறரும் வருந்துதற்குக் காரணமாகிய மிக்க துன்பந்தரும் மொழியினிடமாக உதித்து, மாமலர் நாற்றம்போல்-சிறந்த மலரிடத்து நாற்றம்போல், மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ப்பட்டதாதலால் ;

உரைத்த உரை யென்க. ஏது நிகழ்ச்சி-பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி ; வினை பயன்கொடுத்தற்குத் தோன்றுவது என்ற படி ; ¹"ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்" ²"ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள" என இந்நூலுள்ளே பின்னரும் இப்பெயர் பயின்று வருகின்றது. மாமலர் நாற்றம்போல் என்ற உவமையால் நல்வினை பயனளித்தற் கெதிர்ந்துள தென்பது பெற்றாம். மலரின்கண் நாற்றம் அடங்கியிருந்து பின் வெளிப்படுதல் போல் கன்மமும் மறைந்திருந்து பயனளிக்குங் காலம் வந்துழி வெளிப்படு மென்க.

1 மணி. 9 : 54. ² மணி. 12 : 105 ; 21 : 160.

4.2

மலர்வனம் புக்க காதை

5

10
தந்தையும் தாயுந் தாநனி யுழந்த
வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை
மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்
புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட

5

உரை

10

தந்தையும் தாயும் தாம் நனி உழந்த - தன் தந்தை தாயரான கோவலனும் கண்ணகியும் உற்று மிக வருந்திய, வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-கொடிய துயரினை விளைக்கும் துன்ப மொழிகள் காதினுள்ளே சுட, காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை - மணிமேகலை அவர்பால் அன்பு மிக்க உள்ளங் கலக்க முற்று, மாதர் செங்கண் வரி வனப்பு அழித்து - அழகிய சிவந்த கண்களில் மை எழுதின அழகினைச் சிதைத்து, புலம்பு நீர் உருட்டி-வருத்தத்தா லுண்டாகிய கண்ணீரை உதிர்த்து, பொதி அவிழ் நறுமலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட - கட்ட விழ்ந்து விளங்குகின்ற இதழ்களையுடைய நறிய மலர் மாலையின் மீது வீழ்த்தி அதனை நீராட்ட ;

இடும்பை-மாதவி கூறிய துன்ப மொழிகள், மாதர்-காதல் ; ஈண்டு அழகு. வரு-மையெழுதிய கீற்று; ¹"வரிவனப் புற்ற" என்பது புறம். புலம்புநீர்-தனித்து வீழ்கின்ற நீர்த் துளியுமாம். நீராட்ட - நனைக்க என்றபடி.

1 புறம். 3.3

4.3

மலர்வனம் புக்க காதை

15

மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும்
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்

11

உரை

17

மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரை மலர் குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய சிவந்த கையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர் மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும், மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக்கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள் ;

மாதவி நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க. போல - போலும்படி, தாமரை மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம் ; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது ; அழகுமாம். நிகர்-ஒளி ; ¹"நீர்வார் நிகர். மலர்" ²"அரும்பவிழ் முல்லை, நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம்.

¹ அகம். 11. ² சிலப். 9 : 1-2.

4.4

மலர்வனம் புக்க காதை

20

25 குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பந் தலைத்தலை எய்தும்
மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள்
அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய
கடைமணி யுகுநீர் கண்டன னாயிற்
படையிட்டு நடுங்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலு முண்டோ
பேடிய ரன்றொ பெற்றியின் நின்றிடின்

18

உரை

25

குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு-தாய் தந்தையர்க்கு நேர்ந்த கொடிய துன்பத்தினைக் கேட்டு, தணியாத் துன்பம் தலைத் தலை எய்தும்-ஆறாத் துயரினை மேன்மேல் அடையும், மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்-மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள், அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய-அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற, கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் -கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், படைஇட்டு நடுங்கும் காமன்-காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ ;

ஆய்-ஆராய்ந்தெடுத்த என்றுமாம். ¹"ஆவின் கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற்பகை வெல்லக் கருதியிருந்த காமன் இனி வெல்லுதலரிதென்று படையை ஏறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ; எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல். ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம் துய்க்குந் தகுதியில்லாதவர்.

¹சிலப், 20 : 54.

4.5

மலர்வனம் புக்க காதை

ஆங்ஙன மன்றியும் அணியிழை கேளாய்
ஈங்கிந் நகரத் தியான்வருங் காரணம்

26

உரை

27

ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், அணியிழை கேளாய்ஈங்கு இந்நகரத்து யான் வருங் காரணம் - இந்நகரத்தின்கண் யான் வந்த காரணத்தை மாதவி கேட்பாயாக ;

ஆங்ஙனம் : சுட்டு. ஈங்கு : அசை.

4.6

மலர்வனம் புக்க காதை

30
பாரா வாரம் பல்வளம் பழுநிய
காராளர் சண்பையிற் கௌசிக னென்போன்
இருபிறப் பாளன் ஒருமக ளுள்ளேன்
ஒருதனி யஞ்சேன் ஓரா நெஞ்மோடு
ஆரா மத்திடை அலர்கொய் வேன்றனை

28

உரை

32

பாராவாரம் பல்வளம் பழுநிய-கடல் தரும் பல வளங்களும் முதிர்ந்த, காராளர் சண்பையில் - காராளருடைய சண்பை நகரத்தில், கௌசிகன் என்போன் இரு பிறப்பாளன் ஒரு மகள்
உள்ளேன்-கௌசிகன் என்னும் அந்தணனுக்கு ஒரே மகளாயுள்ளயான், ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு - தன்னந்தனியே செல்வதனை அஞ்சாமல் ஒன்றையும் ஆராயாத உள்ளத்தோடு,
ஆராமத்திடை அலர் கொய்வேன்தனை-உப வனத்திலே மலர் கொய்வேனாயினேன் ; அங்ஙனம் கொய்த என்னை ;

பாராவாரப் பல்வளம் என்பது மெலிந்து நின்றது. காராளர்-ஓர் சாதியார் ; வேளாளருமாம். சண்பை - ஒரு நகரம் ; சீகாழியுமாம்.

4.7

மலர்வனம் புக்க காதை

35

40 மாருத வேகனென் பானோர் விஞ்சையன்
திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் றமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற்
படுத்தன னாங்கவன் பான்மையே னாயினேன்
ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி
நீங்கினன் றன்பதி நெட்டிடை யாயினும்

33

உரை

41

மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த - திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற, பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையை யுடையவனும் பொற் பூணினை யுடையவனும் பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன், எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு விசும்பில் எழுந்து அகப் படுத்திக்கொண்டான்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் - அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையே னாயினேன் ; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும் - அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண் இமைக்கும் அளவிலே என்னை இந்நகரில்விட்டு மறைந்து நீங்கினன் ;

தாரன் மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன என்றியைக்க. ¹"தாரன்......படிமையன்," என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன் பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம்.

¹ சிலப். 15, 157-8.

4.8

மலர்வனம் புக்க காதை

மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள்

42

உரை

43

மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான் - மாணிக்கப் பூங் கொம்பனைய மணிமேகலை, தனித்து அவர்கொய்யும் தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் - தகுதி வாய்ந்தவ ளல்லள் ;

நீங்கினன் ; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வதுண்டாகலின் தனித் தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் என விரித்துரைக்க.

4.9

மலர்வனம் புக்க காதை

120

125 சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்

116

உரை

125

சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும் இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள வாள்நகை- பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர் போலுஞ் சிவந்த கையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய அழகிய இளங்கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும், இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும், எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில் நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக்கோலத்துப் பேடு காண்குநரும் - பேடிக் கோலத்தையுடைய பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்:

சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலியவற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவதனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும்.

"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். ¹"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" ²"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பணித்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன.

¹ சில்ப. 6 : 567. ² சிலப். 27 : 181-6.

4.10

மலர்வனம் புக்க காதை

50
விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள்
மண்ணவர் விழையார் வானவ ரல்லது
பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும்
வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று
உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்

47

உரை

52

விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர் விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் -பெருமை பொருந்திய வாடாத பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று - கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று, உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் - உய்யானத்தின்கண்
அறிந்தோர் செல்லமாட்டார்கள்;

வானவர் விழைதலன்றி மண்ணவர் விழையார் என்க. வானவர் விரும்புதலால் வண்டு இமிராவாயின ; ¹"சுரம்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" என்பது காண்க. வாடாத மலர் மாலைகள் தேவர்களால் நிருமிக்கப்பட்டன. மாலைகள் தூக்கலின் பூதங் காக்குமென்று கருது வாராவர். உய்யானம்-உத்தியானம் ; அரசர் விளையாடுஞ்சோலை.

¹ முருகு. 43.

4.11

மலர்வனம் புக்க காதை

55

வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த
சம்பாதி யிருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேரனாங் கிருந்த கவோ வனமும்
மூப்புடை முதுமைய தாககணங் குடைய
யாப்புடைத் தாக அறிந்தோ ரெய்தார்

53

உரை

58

வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-ஞாயிற்றின் கதிர் வெப்பத்தால் விரிந்த சிறகினை இழந்த, சம்பாதி இருந்த சம்பாதி வனமும்-சம்பாதி என்பவன் இருந்த சம்பாதி வனமும், தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை - அழியாத நீர்ப்பெருக் கினையுடைய காவிரி நங்கையின் தந்தையாகிய, கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் - கவேரன் எனபவன் இருந்த கவேர வனமும், மூப்புடை முதுமைய தாக்கணங்கு உடைய - மிக்க முதுமையுடையனவாகிய தீண்டி வருத்தும்பெண் தெய்வங்களை உடையனவாதலின், யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார் - அறிவுடையோர் அவற்றை உறதியுடையவாகக் கருதி அவற்றின்கட் செல்லார் ;

சம்பாதி - கழுகரசன் ; சடாயுவினுடன் பிறந்தவன் ; இவன் வானிலே பறந்து ஞாயிற்று மண்டிலத்தின் அணிமையிற் சென்றகாலை ஞாயிற்றின் வெம்மையாற் சிறை தீயப்பெற்றனன் என்பர். சம்பாதி, சடாயு என்னும் இருவரும் இறைவனைப் பூசித்த இடம் திருப்புள்ளிருக்குவேளூர் என்னும் பதியாகும் ; ¹"தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர், புள்ளானார்க் கரையரிடம் புள்ளிருக்கு வேளூரே," என்பது காண்க. புகார் நகரம் அப்பதிக்கு அணித்தாகலின் சம்பாதி ஆண்டு வந்திருத்தல் இயல்பேயாகும். வேத்து முனியாகிய கவேரன் என்பவன் பிரமனைக் குறித்து அருந்தவம் புரிந்து அவனருளால் விட்டுணு மாயையைப் புதல்வியாகப் பெற்று முத்தி யெய்தினனென்றும், பின்பு அக்கன்னி பிரமன் கட்டளையால் நதி வடிவுற்றமையால் அந்நதி காவேரியெனப் பெயர் பெற்றதென்றும் புராணங் கூறுமென்பர். யாப் புடைத்தாக-இழுக்கில்லனவாக ; யாப்புடைத்தாக அணங்குடைய என்றியைத்தலுமாம்.

¹ சம்பந்தர் தேவாரம், 2 : 1.

4.12

மலர்வனம் புக்க காதை

60
அருளும் அன்பும் ஆருயி ரோம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பிற்
பகவன தாணையிற் பன்மரம் பூக்கும்

59

உரை

61

அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் - கருணையும் நேயமும் ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோளும் நீங்காத நோன்பினையுடைய, பகவனது ஆணையின் பல்மரம்பூக்கும் உவவனம் என்பது ஒன்று உண்டு - புத்த தேவனது ஆணையால் பல மரங்களும் இடையறாது பூக்கின்ற உவவனம் என்னும் பெயருள்ள சோலை ஒன்றுண்டு ;

அருள் - அன்பு காரணமாகத் தோன்றும் அளி. அன்பு - அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். பூட்கை - மேற்கோள்.

4.13

மலர்வனம் புக்க காதை

65
உவவன மென்பதொன் றுண்டத னுள்ளது
விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின்

62

உரை

66

அதன் உள்ளது-அச்சோலையின் உள்ளிடத்ததாகிய, விளிப்பு அறை போகாது மெய்புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு - ஓசை வெளியே போகாமல் தன்னைச் சார்ந்தாருடம்பை மட்டும் புறத்தே தோற்றுவிக்கும் பளிக்குமண்டபம் ஒன்று உண்டு; அதன் உள்ளது - அம்மண்டபத்தின் உள்ளிடத்ததாகிய, தூநிற மாமணிச் சுடர்ஒளி விரிந்த தாமரைப்பீடிகை தான் உண்டு- தூய நிறமுடைய மாணிக்கத்தின் மிக்க ஒளிபரந்த பதுமபீடம் ஒன்றுண்டு ;

அதன் உள்ளதாகிய மண்டபம் என்றும், அதன் உள்ளதாகிய பீடிகை என்றும் ஒட்டுக. அறை போதல்-வெளியே போதல். தன்னுள் எய்தினவரது ஓசையை வெளிப்படுத்தாது, உருவினை மட்டும் வெளிப் படுத்துவதென்று பளிங்கு மண்டபத்தின் இயல்பு கூறியபடி. பளிக்கறை மண்டபம்-பளிங்கறையாகிய மண்டபம்; பளிங்குப் பாறையாலாகிய மண்டபமுமாம். தாமரைப் பீடிகை-புத்தன் பாதபீடம். "புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றலும், அதனை வழிபடுவோர் அதுபற்றி, 'ஓம் மணிபத்மே ஹும்' என்ற மந்திரத்தை ஜபித்தலும் பௌத்த சமய மரபு,"
என்பர்.

4.14

மலர்வனம் புக்க காதை

70
அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும்
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர்
ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும்
நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின்

67

உரை

72

ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடமாட்டா, அவற்றின்கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக் கேட்பாயாக, கடம்பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் - ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்-அப்பீடத்தின்கண் அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேறும்; நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின் - நினைப்பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும் சொல்லாது அவண் தங்கும் ;

தொல் யாண்டு-பல் யாண்டு ; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் தொல் யாண்டு', என்றார் - தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப்பற்றி. கடம் - கடன் ; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க.

4.15

மலர்வனம் புக்க காதை

75

ஈங்கிதன் காரணம் என்னை யென்றியேல்
சிந்தை யின்றியுஞ் செய்வினை யுறுமெனும்
வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்
செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும்
எய்தா தென்போர்க் கேது வாகவும்
பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட
மயன்பண் டிழைத்த மரபின ததுதான்

73

உரை

79

ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இதற்குரிய காரணம் யாதென வினவுதியாயின், சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும்-மனத்தொடு கூடாத வழியும் செய்தவினை பின்வந்து பயன்றரும் என்கின்ற, வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்-வலியினையுடைய நோன்பிகள் வருத்தங் கொள்ளவும், செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தாது எனபோர்க்கு ஏதுவாகவும்-மனத்தொடு கூடாவிடின் செய்த வினை சிறிதும் வந்து பயனளியாது என்போர்க்குக் கருவியாகவும், பயம்கெழு மா மலர் இட்டுக் காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான் - மலர்களை இட்டுக் காட்டுமாறு மயன் என்போனால் முன்னர்ச் செய்யப்பட்ட பயன் சிறந்த முறைமையை யுடையதாகும் அத்தாமரைப் பீடம் ;

'பயங்கெழு மரபினது எனக் கூட்டுக. மனத்தொடு கூடாவழி வினை பயன்றரா தென்பதனை, ¹"இன்னா வெனத்தா ணுணரந்தவை துன்னாமை வேண்டும்" ²"மனத்தானாம் மாணா செய்யாமை தலை" என்னுந் திருக்குறள்களானும், அவற்றிற்கு முறையே, "அறமும் பாவமும் உளவாவது மனமுளனாய வழியாகலான் "உணர்ந்தவை என்றார்" எனவும், "ஈண்டு மனத்தா னாகாத வழிப் பாவமில்லை யென்பது பெற்றாம்" எனவும் பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக.

¹ ² திருக்குறள் 3167.

4.16

மலர்வனம் புக்க காதை

80

85
அவ்வன மல்ல தணியிழை நின்மகள்
செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவலென்
றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி
மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீ இச்

80

உரை

85

அவ்வனம் அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை- மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலையொடு மாமலர் கொய்ய - மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனை யுடைய மாதவி யானும் செல்வேன் என்று,அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள் செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது;

செவ்வனம் - வேறாக; ¹ "திருமக யிருக்கை செவ்வனங் கழிந்து" என்பழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க ; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி.

¹ சிலப். 6 : 127.

4.17.1

மலர்வனம் புக்க காதை

4.17.2

90

4.17.3

95

4.17.4

100 சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன்
தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
காணா உயிர்க்குங் கையற் றேங்கி
உண்ணா நோன்போ டுயவ வியானையின்
மண்ணா மேனியன் வருவோன் றன்னை
வந்தீ ரடிகணும் மலரடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ
அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா
திம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும்
தன்வயிற் றரூஉமென் தலைமக னுரைத்தது
கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின்
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன்
கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்
றுண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும்

4.17.5

86

4.17.6

உரை

4.17.7

103

4.17.8

சிமிலிக் கரண்டையன்-உறியிலே வைத்த குண்டிகையை யுடையவனும், நுழைகோல் பிரம்பினன்-நுண்ணிதாய்த் திரண்ட பிரம்பினை யுடையவனும், தவலரும் சிறப்பின் அராந்தாணத்து
உளோன்-கேடில்லாத மேன்மையையுடைய அருகன்கோட்டத்தே யுள்ளவனும், நாணமும் உடையும் நன்கனம் நீத்து - நாணத்தையும் ஆடையையும் அறவே அகற்றி, காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி- கண்களாற் காண வியலாத சிற்றுயிர்க்கும் நடத்தலாதி தன்றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி, உண்ணா நோன்போடு-உண்ணா விரதத்துடன், உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை-வருந்துதலையுடைய யானையைப்போல வருவோனுமாகிய கழுவாத உடலையுடைவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் - வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ எம்முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது - புழுக்கத்தினைத் தரும் அறையில் அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம், இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலைவருரைத்ததாகிய இம்மை யின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் - சொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக் கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன் பின் நிற்போரும் ;

4.17.9

சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை; ¹"கல்பொளிந்தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி"
என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன்-ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலையொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாPம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை அசைத்து விலக்குதல்; சீல்மில்லாரைக் காணின் அவருடன் பேசாது அவரைப் போம்படி கையசைத்துக் குறிப்பித்தல் சைன முனிவர்க்கு இயல்பு. உண்ணா நோன்பி - இரண்டுவாவும் அட்டமியும் பட்டினி விட்டுண்ணும் விரதி; ²'பட்டினி நோன்பிகள்' என்பதனுரையும், ³"ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங் காத்தல், தாவாத்தவமென்றார்" என்பதும் காண்க. கரண்டையனும் பிரம்பின்னும் ஆகிய ஆராந்தாணத்துள்ளோன் நோன்போடு மேனியனாய் நீத்து ஏங்கி வருபவனை என்றியைத்துலுமாம். தருவதும் உரைத்ததுமாகிய தேறலில் கொலையுமுண்டோ எனக் கூட்டுக. தரூஉம் தலைமகன் எனலுமாம். கொள்ளும், உண்ணும் என்னும் ஏவல் முற்றுக்களில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. பெருங் கதையிற் களிமகன் இயல்பாகக் கூறப்பட்டுள்ள, ⁴"துறக்கம் கூடினுந் துறந்திவ ணீங்கும், பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி, ஆர்த்த யாய னூர்க்களி மூர்க்கன், செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி, அவ்வழி வருமோ ரந்த ணாளனைச், செல்ல லாணை நில்லிவ ணீயென, எய்தச் சென்று வைதவண் விலக்கி, வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப், பழித்துக் கூறு நின் பார்ப்பனக் கணமது, சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக், கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்" எனபது ஈண்டு அறியற்பாலது.

4.17.10

¹ மதுரை, 482-3. ² சிலப். 15: 164. ³ சீவக. 1547. ⁴ பெருங். 1. 40: 88-98.

4.18

மலர்வனம் புக்க காதை

105

110

115
கணவிரி மாலை கட்டிய திரணையன்
குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன்
சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்
வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப்
பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம்
தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும்
ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மைய லுற்ற மகன்பின் வருந்திக்
கையறு துன்பங் கண்டுநிற் குநரும்

104

உரை

115

கணவிரி மாலை கட்டிய திரணையன்-அலரிப்பூவால் திரணையாகக் கட்டப்பட்ட மாலையை யுடையனாய், குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்-எருக்கினது குவிந்த முகைகளாற் கோக்கப் பெற்ற தாரினை யுடையனாய், சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-சிதரின துணியோடு வானிலே உயரந்த பெரிய மரக் கிளைகளிலுள்ள செறிந்த சுள்ளிகளை ஒடித்துக் கட்டிய உடையை யுடையனாய், வெண்பலி சாந்தம் மெய்முழுது உறீஇ-வெண்ணீறுஞ் சந்தனமும் உடல் முழுதும் பூசிக் கொண்டு, பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு - பயனில்லாத சொற்களைப் பலரொடுங் கூறிக் கொண்டு, அமூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்-அழுதும் விழந்தும் அரற்றியும் கூவியும், தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் - தொழுதும் எழுந்தும் சுழலுதலைச் செய்தும்,. ஓடலும் ஓடும் - ஓடியும், ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும்-ஒரு பக்கமாக ஒதுங்கி நெடிது நின்றும், நிழலொடு மறலும்-நிழலுடன் பகைமை கொண்டும் நிற்கின்ற, மையலுற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டு நிற்குநரும்-பித்துற்றவனது செயலற்ற துன்பத்தினைக் கண்டு வருந்தி அவன் பின்னே நிற்போரும்;

கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. ததர்-கொத்துமாம்; ¹"சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்" என்பம் காண்க. வெண்பலி-வெண்ணீறு; சாம்பல். வெண்பலியாகிய சாந்தமெனக் கொண்டு வல்லொற்று விகாரத்தாற் றொக்க தெனினுமாம். சுழலலும் சுழலும்-சுழலுதலையும் செய்யும்; பின்வருவனவற்றிற்கும் இங்ஙனம் பொருள் கொள்க; ²"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதூஉம் அது. அழூஉம் முதலியவற்றை வினையெச்சப்படுத்து, நிற்கின்ற என ஒரு சொல் விரித்து முடிக்க; இனி, மையலுற்ற மகன் என்பதனை எழுவாயாக்கி, அழூஉம் முதலிய வினைகளோடு தனித்தனி முடித்து, அவன் என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம்.

¹ சிறுபாண். 254-5. ² சிலப். 22-154.

4.19

மலர்வனம் புக்க காதை

120

125 சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்

116

உரை

125

சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும் இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள வாள்நகை- பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர் போலுஞ் சிவந்த கையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய அழகிய இளங்கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும், இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும், எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில் நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக்கோலத்துப் பேடு காண்குநரும் - பேடிக் கோலத்தையுடைய பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்:

சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலியவற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவதனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும்.

"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். ¹"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" ²"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பணித்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன.

¹ சில்ப. 6 : 567. ² சிலப். 27 : 181-6.

4.20

மலர்வனம் புக்க காதை

130 வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும்

126

உரை

131

வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின் முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற தெய்வ வடிவினை யுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் ஒப்புமை காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த ஓவிய்க்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக் கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ;

கொடி சுடுமண்-செங்கல்; ¹"சுடும ணோங்கியநெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை; ²"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்," ³"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்; ⁴"வித்தக ரியற்றிய" என்பர் பின்னும்.

¹ பெரும்பாண். 405. ² மதுரை. 516-8. ³ மணி. 21: 132-3 ⁴ மணி. 3 : ;167.

4.21

மலர்வனம் புக்க காதை

135

140

145 விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற்
பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி யப்பிய நெய்யணி முச்சி
மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவவாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்

132

உரை

145

விழுவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - அழவினைக் கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக் கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய மூன்று சரங்கள், பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ - அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவு திருந்தாத மழலையாகிய் இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவச்சுற்றுடைப் பூந்துகில் - அற்றத்தினை மறைக்காமற் சுறறப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும், தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து- பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல், இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல்களை யணிந்த மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழைக் கால்கோள் காண்மினோ என்-ஆலின் கிழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின் விழாக் கால்கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக் கண்டு நிற்போரும் ;

கோவையாகிய முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு கடுகை அப்புதல் மரபு ; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று ; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப்பாருமுளர். மெய் - சொல்லின் வடிவு, குதலை-இளஞ்சொல்; ¹"குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை - காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவாகிய அணி ; இது தாலி என்றும் வழங்கும் ; இதனைச் சிறுவர்க்கு அணிதல் மரபு;²தாலி களைந்தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை யானையை வைத்து ஊர்தல் ³"பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும் கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும் குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர் நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர்

¹ சிலப். 30 ; 114-5. ² புறம். 77. ³ சீவக. 89.

4.22

மலர்வனம் புக்க காதை

150 விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்

146

உரை

150

விராடன் பேரூர் விசயனாம் பேடியைக காணிய சூழந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண் அருச்சுனனாகிய பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத்தினை யுடைய
மக்களைப்போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி-வந்து மணி மேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து, அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாதவளுமாவள் ;

பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக் கொண்டு பிருகந்தளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் ¹"உப்பமை காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் 'அமை' எனபதற்கு இப்பொருள் கூறப்படுதல் காண்க..

¹ சீவக. 107 ; 175.

4.23

மலர்வனம் புக்க காதை

155 மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின்
நல்லிள வன்னம் நாணா தாங்குள
வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை
மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாமுள பாவைதன கிளவிக்
கெஞ்சல கொல்லொ இசையுந வல்ல
என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச்

151

உரை

158

ஈங்கிவள் மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகில் - இம்மணிமேகலை சிறந்த மலர் கொய்தற்குப் பூம்பொழிலில் நுழைந்தால், நல் இள அன்னம் நாணாது ஆங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை-அங்கோயுள்ள நல்ல இளைய அன்னப் புறவைகள் நாணாமல் இவள் நடைபோல் நடக்க வல்லனவோ, மாமயில் ஆங்குள வந்து முன்நிற்பன சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன் - ஆண்டுள்ள அழகிய மயில்கள் இந்நங்கையின் எதிரே வந்து நிற்பனவாகி இவளுடன் சாயலைக் கற்பனவாகுமோ, பைங்கிளி தாம் உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ - அங்கிருக்கும் பசிய கிளிகள் இம்மங்கையின் மொழிகட்குத் தோற்பன வல்லவோ, இசையுந அல்ல - இவை யாவும் ஒப்பனவல்ல, என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக-என்று இவைகளைக் கூறி அனைவரும் வருந்திக் கெட,

ஆங்குள அன்னம் நாணாது வல்லுந கொல்லோ எனவும், ஆங்கள மாமயில் வந்து முன்னிற்பனவாய்க் கற்பனகொலோ எனவும் இயையும். மயில்கள் கற்றற்குத்ததானும் முன்வந்து நிற்கமாட்டா என்றபடி. சாயல் - மென்னை. எஞ்சுதல் - குறைதல் ; தோற்றல்.

4.24

மலர்வனம் புக்க காதை

159 செந்தளிர்சி சேவடி நிலம்வடு வுறாமல்

159

உரை

159

செந்தளிர்ச் சேவடிநிலம் வடு உறாமல் - சிவந்த தளிர்போலும் சிவந்த அடகளால் நிலத்திலே வடுவுண்டாகாமற் சென்று ;

வடு - சுவடு அடியும் நிலமும் வடுவுறாமல் என்றுமாம். சென்று என ஒரு சொல் வருவிக்க.

4.25

மலர்வனம் புக்க காதை

160

165

170 குரவமும் மரவமுங் குருந்துங் கொன்றையும்
திலகமும் வகுளமுங் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமும் முடமுட் டாழையும்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனந் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென்.

160

உரை

171

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - குராவும் வெண்கடம்பும் குருந்தும் கொன்றையும், திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் - மஞ்சாடியும் மகிழும் சிவந்த காலையுடைய வெட்சியும், நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - நாரத்தையும் சுரபுன்னையும் பரந்து மலர்கின்ற புன்னையும், பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்-பிடவமும் செம்முல்லையும் வளைந்த முள்ளையுடைய தாழையும், குடசமும் வெதிரமும் கொழுங்கால்அசோகமும் - வெட்பாலையும் மூங்கிலும் பருத்த அடியினையுடைய அசோகமும், செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் - செருந்தியும் வேங்கையும் பெரிய சண்பகமும், எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி-நெருப்பைப்போற் சிவந்த பூக்களையுடைய இலவமும் ஆகியவை விரிந்த மலர்களைப் பரப்ப, வித்தாகர் இயற்றிய விளங்கிய கைவினை - கைத்தொழிலில் மேம்பட்ட வித்தகரால் இயற்றப்பட்ட, சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-சித்திரச் தொழிலமைந்த துகிர் போர்த்ததுபோலத் தோன்றிய, உவவனம் தன்னை - உவவனத்தை, தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு - தொழுது காட்டிய சுதபதியுடன், மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை - மணிமேகலை மலர் கொய்தற்கு அடைந்தனள் என்க,.

பிடவம்-குட்டிப் பிடவம் என்னும் கொடி; ¹"புதன்மிசைத் தளவினிதன்முட் செந்நனை, நெருங்குகுலைப் பிடவமோ டொருங்கு பிணியவிழ" என்பது அகம். பரப்பி - பரப்ப வென்க. புத்தன் பாதபீடிகையுள்ள தாகலின் வனத்தைத் தொழுது காட்டினள்
என்க.

மாதவி யுரைத்த உரைமுன் றோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின், அக்காரிகை வெதுப்பக் கலங்கி உருட்டி ஆட்ட, மாதவி நோக்கி மாற்றிக் கொணர்வாய் என்றலும், அதனைக் கேட்டுத் துயரொடு கூறும் சுதமதி, 'கண்ணீரைக் கண்டனனாயின் காமன் நடுங்கும்; ஆடவர் அகறலுமுண்டோ; நின்றிடிற் பேடிய ரன்றோ ; அன்றியும், யான் வருங் காரணம் கேளாய்; கொய்வேனை விஞ்சையன் எடுத்தனன், எழுந்தனன், படுத்தனன் ; ஆயினேன் ; அவன் அகன்று நீங்கினன்; ஆதலால் மணிமேகலை தன்மையளல்லள் ; போகின், உழையோர் ஆங்குளர்; செல்லார்; எய்தார்; உவவனமென்ப தொன்றுண்டு; உண்டு; உண்டு; மரபினது அதுதான்; செம்மை தானிலள்; யானும் போவல்; என்று கூடிச் செல்வுழி, பின்னரும் நிற்குநரும் காண்குநரும் நிற்குநரும் நிற்குநரும் மணிமேகலையைச் சுற்றி இனைந்துக, மணிமேகலை சுதமதி தன்னொடு மலர் கொய்யப் புகுந்தனள் என முடிக்க.

¹ அகம். 23.

Linked texts (1)