Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4.7

Maṇimēkalai urai 4.7

Language
Tamil

4.7

மலர்வனம் புக்க காதை

35

40 மாருத வேகனென் பானோர் விஞ்சையன்
திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் றமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற்
படுத்தன னாங்கவன் பான்மையே னாயினேன்
ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி
நீங்கினன் றன்பதி நெட்டிடை யாயினும்

33

உரை

41

மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த - திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற, பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையை யுடையவனும் பொற் பூணினை யுடையவனும் பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன், எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு விசும்பில் எழுந்து அகப் படுத்திக்கொண்டான்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் - அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையே னாயினேன் ; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும் - அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண் இமைக்கும் அளவிலே என்னை இந்நகரில்விட்டு மறைந்து நீங்கினன் ;

தாரன் மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன என்றியைக்க. ¹"தாரன்......படிமையன்," என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன் பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம்.

¹ சிலப். 15, 157-8.

Linked texts (1)