Maṇimēkalai's Renunciation 9
Maṇimēkalai urai 9
- Language
- Tamil
9.1
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
5
10 ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல
வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத்
தத்துவநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
ஆம்பலுங் குவளையும தாம்புணர்ந்து மயங்கி
வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி
முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும்
வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர்
அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி
1
உரை
12
ஈங்கு இவள் இன்னணமாக - புகார் நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்குதிரை உடுத்த மணிபல்லவத் திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணி பல்லவத்தின்கண், தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக் கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய கழனியில், முரி செம்பவளமொடு விரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில், ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையுமாகிய மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள் உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில், முடக்கால் புன்னையும் மடப்பூர் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும் மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில் பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக் கிய அழகிய பந்தரின்கண், அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப் போன்ற வெள்ளிய மண லில் நறிய மலர்களாலாகிய படுக்கையிலிருந்து, துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும் எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மணிமேகலை ;
அடைகரைக்கண் கழனியில் என்றுமாம். தொடுப்பு - விதைப்பு; ¹"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க; விளாக் கொண்டு உழுதலுமாம். முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம். அறல் - நீர் அரித்து ஒழுகுவதால் மணல் அற்று அற்று இருப்பது. மணிபல்லவத்திடைப் பரப்பில் இலஞ்சிக் கரையில் மணலிற் பள்ளியில் துயிலெழுந்த மணிமேகலை யென்க.
¹ மதுரைக். 11.
9.2
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
15
10
15
காதற் சுற்றம் மறந்து கடைகொள
வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டறி கிளையொடு பதியுங் காணாள்
கண்டறி யாதன கண்ணிற் காணா
நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங்
காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது
சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய்
வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்
எல்வளை வாராய் விட்டகன் றனையோ
விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன்
ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத்
13
உரை
27
காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று - அன்பின் மிக்க சுற்றங்களை மறந்து முடிவு கொள்ள வேறிடத்தில் தோன்றிய உயிரைப்போல, பண்டுஅறிகிளையொடு பதியும் காணாள்-முன்னர்த் தன்னாலறியப்பட்ட சுற்றத்துடன் நகரத்தையும் காணாதவளாகி, கண்டு அறியாதன கண்ணிற் காணா - முன் கண்டறியப் படாதனவற்றைக் கண்களாற் கண்டு, நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் - நீலநிறமுடைய பெரிய கடலில் அணிமைக்கண், காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப - இளஞாயிறு கதிர்களை விரித்து உதிக்க, உவவன மருங்கில் ஓரிடம் கொல் இது-இஃது உவவனத்தில் ஓரிடமோ, சுதமதி ஒளித்தாய்- சுதமதீ ஒளிந்து கொண்டாயோ, துயரம் செய்தனை - துன்பம் செய்தனை, நனவோ கனவோ என்பதை அறியேன்-இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன், மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-உள்ளம் நடுங்குதலுறுகின்றது மறுமொழி தருவாய், வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்-வலிதாகிய இருள் நீங்கியது மாதவி மயங்குவாள், எல்வளை வாராய்-ஒளி பொருந்திய வளையினை யுடையாய் வருவாயாக, விட்டு அகன்றனையோ - என்னைவிட்டுச் சென்றனையோ, விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் - விளங்குகின்ற அணிகளுடன் வித்தையினாலே தோன்றியமடந்தை, வஞ்சம் செய்தனன் கொல்லோ அறியேன் - வஞ்சனை செய்தனளோ அறியேனே, ஒரு தனி அஞ்சுவேன் திருவே வா என-ஒப்பற்ற தனிமையை அஞ்சுகின்றேன் திருவனையாய் வருக என்று;
கடைகொள - முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம் அன்றாக; அணிமையில் ; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய் - வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை யென்றலுமாம்.
9.3
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
30
35
கதிரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாகப்
பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப்
பாசறை மன்னர் பாடி போல
வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும்
துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும்
யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள்
28
உரை
35
திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்-அலையில் தவழ்கின்ற புட்களும் விரிந்த சிறகினையுடைய பறவைகளும், எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் - எழுந்து வீழ்கின்ற சில்லையும் ஒடுங்கிய சிறகினையுடைய முழுவலும், அன்னச் சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி - அன்னச்சேவலை அரசனாகக்கொண்டு பலநிறங்களையுடைய பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை மன்னர் பாடி போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர் படையும் எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் - நீர்த்துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும் ஆகிய, யாங்கனும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள் ;
திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப் பறவை - கபோதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன. திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும்பறவையும் சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர் - போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர். பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - ¹"கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும் நீர்நீறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது.
¹சிலப். 10 : 114-9.
9.4
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
40 குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில்
தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி
எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக்
கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து
வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து
ஐயா வோவென் றழுவோள் முன்னர்
35
உரை
43
பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள இனங்களைக் காணாத வளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள் கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால், தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில் படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும் கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகியோடு வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினாள் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண் தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே ;
குரல் - கூந்தலின் திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள் விழுமக்கிளவியின் அழுவோள் எனக் கூட்டுக. உருப்ப - முதிர; வெகுள என்றுமாம். ஓகாரம் புலம்பலில் வந்தது.
9.5
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
45
50 விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசன மென்றே
நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது
பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது
தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம்
44
உரை
53
விரிந்து இலங்கு அவிர்ஒளி சிறந்து - விரிந்து விளங்குகின்ற பேரொளி மிக்கு, கதிர்பரப்பி-கிரணங்களை விரித்து, உரை பெறு மும்முழம் நிலமிசை ஓங்கி - புகழமைந்த நிலத்தின்மீது மூன்று முழ அளவினுக்கு உயர்ந்து, திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று-நாற்றிசையிலும் ஒன்பதுமுழ அளவினையுடைய இடம் அகன்று, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று -விதி மாட்சிமைப்பட்ட பளிங்கினால் வட்டஞ் செய்யப்பட்டு, பதும சதுரம் மீமிசை விளங்கி-பதுமத்தையுடைய சதுரம் மேலிடத்தில் விளங்கப்பெற்று, அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே-புத்தனுக்கு அமைந்த ஆதனம் என்று, நறுமலர் அல்லது பிற மரஞ் சொரியாது - மரங்கள் நறுமலர்களை அன்றி வேறொன்றையும் சொரியா, பறவையும் முதிர்சிறை பாங்கு சென்று அதிராது - பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யா, தேவர்கோன் இட்ட மாமணிப்பீடிகை - இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளானாய பீடிகை, பிறப்பு விளங்கு அறத்தகை ஆசனம்-காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய ஆசனம்;
சிறந்து பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் என்க. விதி - செய்கை. பதுமம் - புத்தன் பாதமும் ஆம். மீமிசை, ஒரு பொருட் பன்மொழி. மரம் பிற சொரியாது, பறவை சிறை அதிராது, அவ்வாறாகத் தேவர் கோன் இட்ட பீடிகையென விரிக்க.
9.6
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
55
60 கீழ்நில மருங்கின் நாகநா டாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதீ தென்றே எடுக்க லாற்றார்
தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே
பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும்
பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும்
தரும பீடிகை தோன்றிய தாங்கென்
54
உரை
63
கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் - கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும். இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி-மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம் பெரும் பற்று நீங்கலு நீங்கார் - இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம நீங்குதலையும் செய்யாதவர்களாய், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து-சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம் பெரும் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், இருஞ்செரு ஒழிமின் எமது ஈது என்றே ; நீவிர் நுமது பெரிய போரை நீங்குமின் இஃது எம்முடையது என்று கூறி, பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் - பெரிய தவமுனிவனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, பொருவறு சிறப்பில் புரையோர் ஏத்தும்-ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை தோன்றியது ஆங்கென் - தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க.
நாக இலச்சினை யுடைமையால் நாகரெனப் பெயர்பெற்ற ஒரு வகை மக்கள் வாழும் நாடு நாகநாடு என்பர். இந்நாட்டின் பெயர் பின்னரும் இந்நூலிற் பலவிடத்து வந்துளது. தம, அ-ஆறனுருபு. நீங்கலும் நீங்கார் என்னும் அடுக்கினுள் பின்னது பொதுவினையாகும் ; முன்பு, "சுழலலுஞ் சுழலும், ஓடலு மோடும் ஒரு சிறை யொதுங்கி, நீடலும் நீடும்," (3 : 111-3) என வந்தமையுங் காண்க.
மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம், தரும பீடிகை என்பன ஒரு பொருள்மேல் வந்தன. அழுவோள் முன்னர் பீடிகை தோன்றிய தென்க.
இவள் இன்னணமாக, மணிபல்லவத்திடைத் துயிலெழும் அஞ்சி லோதி, போன்று காணாளாய்க் கண்டு திருவே வாவென்று அழுவோள் முன்னர்த் தரும பீடிகை ஆங்குத் தோன்றியதென்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil