Maṇimēkalai's Renunciation 9.5
Maṇimēkalai urai 9.5
- Language
- Tamil
9.5
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
45
50 விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசன மென்றே
நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது
பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது
தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம்
44
உரை
53
விரிந்து இலங்கு அவிர்ஒளி சிறந்து - விரிந்து விளங்குகின்ற பேரொளி மிக்கு, கதிர்பரப்பி-கிரணங்களை விரித்து, உரை பெறு மும்முழம் நிலமிசை ஓங்கி - புகழமைந்த நிலத்தின்மீது மூன்று முழ அளவினுக்கு உயர்ந்து, திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று-நாற்றிசையிலும் ஒன்பதுமுழ அளவினையுடைய இடம் அகன்று, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று -விதி மாட்சிமைப்பட்ட பளிங்கினால் வட்டஞ் செய்யப்பட்டு, பதும சதுரம் மீமிசை விளங்கி-பதுமத்தையுடைய சதுரம் மேலிடத்தில் விளங்கப்பெற்று, அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே-புத்தனுக்கு அமைந்த ஆதனம் என்று, நறுமலர் அல்லது பிற மரஞ் சொரியாது - மரங்கள் நறுமலர்களை அன்றி வேறொன்றையும் சொரியா, பறவையும் முதிர்சிறை பாங்கு சென்று அதிராது - பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யா, தேவர்கோன் இட்ட மாமணிப்பீடிகை - இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளானாய பீடிகை, பிறப்பு விளங்கு அறத்தகை ஆசனம்-காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய ஆசனம்;
சிறந்து பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் என்க. விதி - செய்கை. பதுமம் - புத்தன் பாதமும் ஆம். மீமிசை, ஒரு பொருட் பன்மொழி. மரம் பிற சொரியாது, பறவை சிறை அதிராது, அவ்வாறாகத் தேவர் கோன் இட்ட பீடிகையென விரிக்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil