Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p137

Kumārasvāmīya p137

Language
Tamil

p137

மாயம்வல்ல அசுரர்கள் மாண்டொழியும்படி போர்புரிந்த எல்லா மாயமும் வல்ல சிவகுருநாதனும், திருச்செந்தூரின் கண்ணே தேவர்கள் செய்த பூசையை ஏற்றருளிய இறைவனுமாகிய அறுமுகச் சிவனுடைய பெருமைவாய்ந்த திருவடிகளை அந்தப் பிரம தேவனைப்போலத் தியானஞ்செய்யாதுள்ளோர் தனது முன்பாகவரும் பாவிகளைக் கோபிக்கின்ற யமனதுலகத்தைச் சேருங்காலத்தில், அழியாத உயிர்க்கூறைவிடமாகிய (சூக்கும உடம்பு செவ்வையாய்ச் சிதைவுறும்படி உரலிலிடுவோர் செயல்களுங் குறைவுறுமோ?