Pramāṇa · Search · About · API

Kumarasvamiya (Kumārasvāmīya)

In Tamil; with a ṭīkā

Language
Tamil
Date
700–1800 CE
Author
Tiruccendūr Kumārasvāmin
Extent
3,516 passages, 47,816 words
Text
partly digitised
Source
archiveorg · Kumāracuvāmiyam; [Place of publication not identified] : [Publisher not identified] · Scan of a printed edition hosted by the Internet Archive (archive.org); the ancient text is in the public…

Contents

Text

p1

சந்திர சேகரன் றழற்கண் ணேபொறி வந்தன வாறவை மாசில் கங்கைசார்ந் தைந்துட னென்றணை குழவி யாகியா றந்தநன் மாதர்க ளமுத முண்டவே.

p2

க

p3

உண்டவை பலபல வுருவங் காட்டுபு பண்டுமை யாலொரு படிவ மாயவள் கண்டென வருத்தமு துண்டு காமர்செய் அண்டவொண் கயிலைசென் றூடல் செய்யுமால்.

p4

உ

p5

ஆடலில் வெஞ்சுட ரசுவ மேறிய தீடணை யம்புலி யிரத மூர்ந்தது மூடமி லிந்திரன் முதலி னோர்கரி சேடன ழூர்ந்தது செம்பொற் சேயரோ.

p6

ங

p7

செங்கரு டன்புலி சீய மோதிமஞ் சங்குற ழேறுழை சரபம் யாடிவர்ந் தெங்கணு மேகிய தெழில்கொ ளெந்நில மங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே.

p8

ச

p9

பிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம் உள்ளவ னாய்ச்சுர ருலகை நன்குசெய் உள்ளமொ டங்ஙன முலாவி னான்வன நள்ளிட னடைந்துநின் னரஞ்செய் தானவன்.

p10

ரு

p11

செய்யத னோசையிற் சேர்வி லங்குபுள் மெய்யமை ந்தன வேய்ங்கு ழற்றொனி ஐயனெ ழுப்பின னகலுண் மாதர்கள் மையல்செய் விரகமுள் வருந்த நாளுமே.

p12

சு

p13

மேலட ரண்டமு மேய சேயவன் மாலுடல் வரையிடை வந்து வானவர் பாலுறு வலிகளைப் பாறச் செய்துதன் வாலிருந் தைவத வடிவு காட்டினான்.

p14

எ

p15

காட்டலுஞ் சதமகன் கடவு ளேயெமை வாட்டொரு சூரனை மடித்துக் காவெனக் கேட்டவ னஞ்சன்மின் கிருபை செய்துமென் றாட்டரன் பாற்படை யரசை வாங்கினான்.

p16

அ

p17

வாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும் வீங்குமெய்க் கயமுகன் றனையும் வீட்டுபு பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும் நீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன்.

p18

கூ

p19

நீளவை பரிகொடி யாய்க்கி ளர்ந்தன ஆளொரு வரையடைந் தருணை யான்புகழ் வாளன கண்ணியை மணந்து விண்புரந் தாளெயின் மான்மணந் தான்ச யம்புவே.

p20

க0

p21

முதல்வன்புராணமுடிப்பு.

p22

இளம்பூரணான், "அஞ்சன்மின் அருள் புரிவேம்" என்று திருவாய்மலர்ந்தருளி, ஆனந்த தாண்டவனாகிய பரமசிவனிடத்திலேயுள்ள படைக்கல நாயகமாகிய வேலாயுதத் தைப் பெற்றான்.

p23

அ

p24

பெற்று, வலிய பூதகணங்களோடு பூவுலகிற்கு வந்து (கிரௌஞ்ச) கிரியையும் பருத்த வுடம்பையுடைய தாரகாசூரனையும் அழித்து, அவரோடுரிமை பூண்ட பானுகோப னுஞ் சிங்கமுகாசுரனும் மடிந்தொழியக் கண்டு, அவர்கள் தலைவனாகிய சூரபதுமனை வேலாயுதத்தால் இருகூறாய்ப் பிளந்தான்.

p25

கூ

p26

பிளக்கப்பட்ட அவை, கந்தக் கடவுளுக்கு (மயில்) வாகனமாகவுங் (கோழிக்) கொடி யாகவும் விளங்கின. இப்பால், சுயம்புவாகிய அறுமுகச் சிவன், தன்னாலாளப்படுந் திருப் பரங்கிரியை யடைந்து, அருணகிரிநாத சுவாமிகள் புகழும்படியான, வாள்போன்ற கண்ணையுடைய தெய்வயானைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொண்டு இந்திர னுக்கு முடிசூட்டுதலால் விண்ணுலகை யிரக்ஷித்து, தான் ஆண்டுகொள்ளற்குரிய வேடர் குலமாதாய்த் தோன்றிய வள்ளிப்பிராட்டியையுந் திருமணங்கொண்டருளினான்.

p27

க0

p28

முதல்வன்புராணமுடிபுமுற்றிற்று.

p29

சரவணப்பொய்கைத்திருவிளையாடல்.

p30

வாயு செஞ்சுடர் தாங்கு மாசுடர்கள் நாய கங்கையி னான லோடையிலே மேய பங்கய வீயி லாறுமுகச் சேய னாகிய தேவர் தூவினர் பூ.

p31

க

p32

செங்கண் மாலுரை செய்த வாறறுமீன் மங்கை மாரமு தூட்ட வேவருளான் றெங்க ணாயக மாறு சேயெனவாய் அங்கை யாமலர் சார்ந்த வோரமையம்.

p33

உ

p34

சீர்கொள் சேய்விளை யாடல் செய்திடவென் றேர்கொள் சிந்தையி லெண்ணி யேபலவாம் பேர்கொள் போதொரு பிள்ளை பள்ளிகொளல் நேர்கொள் யோகதி லேநி லாவியதால்.

p35

ங

p36

ஒன்ற டிக்கடி தான கைத்ததுலாய் ஒன்று கண்மழை யோட விம்மியதால் ஒன்று பேரொலி யோங்க வேகதறிற் றொன்று நன்னகை யோடி ரங்கியதால்.

p37

ச

p38

ஒன்று கால்விர லேசு வைத்ததுலா வொன்று கையல ரொன்ற வைத்ததுவாய் ஒன்ற ராவென வூர்ந்த தேநொடியுள் ஒன்று பூமித வழ்ந்த தோகையொclass=டே.

p39

மூன்றி ரண்டடி முந்த வேகியதொன் றூன்று சேவடி சேப்ப வோடியதொன் றேன்ற வாநனி யேகி யொல்கியதொன் றூன்ற லார்நில மொன்ற டைந்ததுரோ.

p40

சு

p41

தாய்க ரம்பிடி சார வேகியதொன் றோய்வி லாதெழல் வீழ லாடியதொன் றேய்க டாவலை யேயு ஞற்றியதொன் றாய்வி யப்புற வொன்ற சைந்ததரோ.

p42

எ

p43

தாவு தேரையி னொன்று தத்தியதால் மாவ லேமுச மல்ல ரென்னவிரண் டோவு றாவெழி னெற்றி முட்டியுலாய்த் தாவில் சண்டைகள் செய்த சால்புடனே.

p44

அ

p45

சால்பு கேண்மினி ரண்டு தாள்புயம்வெந் கோல்கொள் சங்கமு ழந்து கோள்விரல்கை வால்கொண் மத்தக மார்பு கண்டமுமாம் வேல்க ளானனி தாக்கி வீறியவே.

p46

கூ

p47

அந்த ரம்பல தாவி யாடிநிலன் வந்தெ லாநனி மண்டி நின்றுநடந் தந்த வாறுமி சைக்க டங்கிடுமோ சந்த னோகைய வாவு தன்மையரே.

p48

க0

p49

முதலாவது சரவணப்பொய்கைத்திருவிளையாடல்.

p50

வாயுதேவனும் அக்கினிதேவனுஞ் சுமந்துள்ள (சிவபிரானுடைய ஆறுநுதல் விழி) அக்கினிப் பெரும்பொறிகள், நயப்பாடுடைய கங்கைநீர் நிரம்பிய நாணற்புல்லொடுகூடிய பொய்கையிலே (விடப்பட்டபோது) பொருந்திய தாமரை மலர் களில், ஆறுதிருமுகங்களையுடைய சேயனாய்விளங்கின. இதனைக்கண்ணுற்ற தேவர்கள், மலர்மாரி சொரிந்தார்கள்.

p51

க

p52

திருமாலானவர் அஞ்ஞான்று கூறியவாறு கார்த்திகைப்பெண்கள் அறுவரும் அமு தூட்ட வந்தபோது, எங்களுடைய முதற்பரம்பொருளாகிய அச்சேய், ஆறு குழந்தைக ளெனவாகி அப்பெண்களின் அழகிய கைம்மலர்களையடைந்திருந்தன. ஒரு சமயத்தில்,-()

p53

அக்குழவிப் பரம்பொருள், சிறந்த பாலலீலைகள் செய்தருளவேண்டுமென்று தனது செவ்விய திருவுளத்திற் கருதி, பலவாகிய திருமேனிப்பெயர்கள் தோன்ற நின்றபோது ஒரு பிள்ளை, (கண்வளருங்கோலமாய்) யோகநித்திரையிலே அமர்ந்து விளங்கிற்று.

p54

ங

p55

ஒரு குழந்தை, உலாவிக்கொண்டு அடிக்கடி சிரித்தது. ஒரு சேய், தாராதாரை யாய்க் கண்ணீர் பெருக அழுதது. ஒரு பிள்ளை, பெருங்குரலோடு கதறிற்று. ஒரு மதலை, புன்சிரிப்போ டழுதது.

p56

ச

p57

ஒரு மழவு, தனது கால்விரலை வாயில்வைத்துச் சுவைத்தது. உலாவிக்கொண் டிருந்த ஒன்று, தனது தாமரைமலர் போன்ற கையினை வாயிலே வைத்துக்கொண்டது. ஒன்று, பாம்புபோல நகர்ந்தது. ஒன்று, நொடிப்பொழுதினுள் மகிழ்ச்சியோடு தரையிலே தவழ்ந்தது.

p58

ரு

p59

ஒன்று, மூன்றிரண்டடிகட்கதிகமாக நடந்தது. ஒன்று, தனது ஊன்றிய திருவடி சிவக்கும்படி ஓடியது. ஒன்று, இயன்றவாறு நன்கு நடந்து அலுத்து நின்றது. ஒன்று, விசாலமான நிலத்தை யடைந்தது.

p60

சு

p61

ஒன்று, தாயின்கையைப் பிடித்துக்கொண்டு சென்றது. ஒன்று, ஓய்வின்றி யெழுந்தும் விழுந்தும் விளையாடிற்று. ஒன்று, தன் பருவத்திற்கேற்றபடியே நடத்தலைச் செய்தது. ஒன்று, தன்னுடைய தாய்கண்டு அதிசயிக்கும்படி ஆட்டம் புரிந்தது.

p62

எ

p63

ஒன்று, தாவிச் செல்லுந் தவளைபோலத் தத்தித்தத்திச் சென்றது. இரண்டு குழந்தைகள், மிக்க வலிமையுள்ள செம்மறிக்கடாக்களைப்போன்றும் மல்லர்களைப்போன் றுங் குறைவில்லாத் தம்முடைய அழகிய நெற்றிகளான் முட்டி உலாவிப் பெருமிதத் தோடு குற்றமற்ற சண்டைகளைச் செய்தன.

p64

அ

p65

(கேட்குந்திறனுடையீர்!) இச்சண்டைகளின் பெருமையை இன்னுங்கேளுங்கள். இக்குழந்தைகள், தம்முடைய இரண்டு அகப்பாதம், மேற்புறம், முதுகு, கணையொத்த கணைக்கால், முழங்கால், வலியவிரல், ஒளிபொருந்திய கைத்தலம், சென்னி, மார்பு, கழுத்து என்னும் இவ்வுறுப்புக்களையே படைக்கலங்களாகக்கொண்டு தாக்கி வீறிநின்றன.

p66

கூ

p67

சரவணப்பொய்கைத்திருவிளையாடன்முற்றிற்று.

p68

கலிநிலைத்துறை.

p69

அளவி லாவறி வன்சர வணத்தட மமல நளின மீதுறு குழவிக ளாய்மிளிர் ஞான்று அளக நீள்சுவை யறுமுக னுயவிர் கென்றே வளர்க ரங்களி ணைத்தது கண்டுள மகிழ்ந்தாள்.

p70

க

p71

அருத்தி னாடிரு வமுதமு முண்டத ராப்பூண் ஒருத்த னோடவ ளோடும டைந்ததொண் கயிலை திருத்த மார்நவ வீரர்க ளிலக்கர்கள் சிதறா அருத்தி யோடிற வாடலுங் கொண்டதம் மழவே.

p72

உ

p73

காலினேழ்கட லுடைத்தது விடுத்தது கடின மாலினோவெழு வான்வரை தகர்த்தது வைசால் வேலினாலிருந் திசைக்கரி யாவையும் வீரிட் டோலி டுஞ்சிறு பந்தென வாடிய துவப்பால்.

p74

ங

p75

இன்ன வாறுபல் பெருந்திரு வாடல்க ளிழைத்த இன்ன லேதுமில் பரம்பொரு ளென்விளை யாட்டாற் பின்ன மாயவெல் லாமுனம் போற்பிறங் குகவென் றுன்னி யன்னண மாக்கிய மாண்பெவ ருறுவார்.

p76

ச

p77

பின்றை மாகயி லாயம தடைந்தெழில் பிறங்கு மன்றன் மெய்யிளம் பூரணன் வதிதரு காலை கொன்றை சூடியை நினைந்தொரு நாரதன் குயிலு கின்ற வேள்வியிற் றகர்பிறந் ததுமுறை கெடலால்.

p78

ரு

p79

தண்டை நூபுரங் கால்களிற் றயங்குமத் தகர்தான் கொண்ட சேவுடல் குலுக்கியெப் புவனமுங் குலுங்க மண்டி யேவரு கிறததை யடக்கென் மாண்பார் அண்டர் மாதவர் தொழுதனர் சேயவ னடியை.

p80

வீர பாகுதன் கைகளி னாலதன் மிடன்மெய்ச் சீர றாவணம் பிடித்ததைக் கொணர்தலுஞ் சேய்மைத் தார மேனிய னதன்மிசை யிவர்ந்துபஃ றலமும் ஏர றாமலு லாவியென் னூர்தியிஃ தென்றான்.

p81

அக்க டாவுமவ் வாறமர் வடைந்தபின் னளியாற் சொக்க றாவய னரனடி களின்மலர் தூவி மிக்க வோகையொ டேவெளி வருகையின் மிடலார் செக்கர் வேலடி போற்றலி லாதய னிரிந்தான்.

p82

அ

p83

அவ்வ யன்றனை யழைத்துமுற் குடிலையி னருத்தஞ் செவ்வ னேதுதி யெனக்குகன் கூறலுஞ் சிருட்டி எவ்வ மின்றுசெய் நானது வென்றய னியம்ப உவ்வி புண்ணுறப் புடைத்தன னவனையவ் வொருவன்.

p84

கூ

p85

குட்டி மேலுதைத் திருந்தளை யிட்டிவற் கொடுபோய் விட்டி டாதுகந் தாசல மிருத்துமி னெனுஞ்சூள் இட்ட வாறுசெய் தனர்கண ரீசனுக் கவ்வோம் கட்ட தோதின னருணையன் புகழ்தனிக் கடவுள்.

p86

க0

p87

இரண்டாவது திருக்கைலாயத்திருவிளையாடல்.

p88

முதற்பத்து

p89

முற்றறிவுடைய முதல்வன், சரவணப்பொய்கையிலே தூய்மை பொருந்திய தாமரைமலர்களின்மீது ஆறு திருக்குழந்தைகளாய் விளங்கியமர்ந்திருந்தபோது, நீண்ட கூந்தலையுடைய பார்வதிதேவி, "நீவிர் அறுமுகத்திருவுருவனாய் அமையுங் கள்" என்று திருவாய்மலர்ந்தருளி, நெடிய தன்னுடைய திருக்கரங்களால் அக்குழந்தை களை ஒரு சேர அணைத்தனள். அவை அவ்வாறே திரண்டது கண்டு திருவுளத்திலே மகிழ்ச்சி கொண்டருளினாள்.

p90

க

p91

(அவ்வறுமுகக் குழந்தைக்கு) உமாதேவி தன்றிருப்பயோதரப் பாலையூட்ட அதுவு முண்டது. பின்னர் அது, பார்வதி பரமேச்சுவரரோடு ஒள்ளிய திருக்கைலாய மலையை யடைந்தது. அங்கு நலங்கள் எவற்றினுந் திருத்தமுற்ற குழந்தைப் பருவத்து (மாணிக்க நிறமுடைய வீரபாகு, தரள நிறமுடைய வீரகேசரி, புட்பராக நிறமுடைய வீரமகேந் திரன், கோமேதக நிறமுடைய வீரமகேசன், வைடூரிய நிறமுடைய வீரபுரந்தரன், வயிர நிறமுடைய வீரராக்கதன், மரகத நிறமுடைய வீரமார்த்தாண்டன், பவள நிறமுடைய வீராந்தகன், நீல நிறமுடைய வீரதீரனெனும் பெயரிய) நவவீரர்களோடும் இலக்ஷம் வீரர் களோடும் பின்னமில்லாப் பிரியத்தோடு நேயமுங் கொள்வதாயிற்று அக்குழந்தை. (உ)

p92

அது, தனது தாளினால் ஏழு கடல்களையும் உடைத்துப் பெருக்கெடுக்க விட்டது. கூர்மை மிக்க ஆயுதத்தினால், பெருமை கெடாத வானளாவிய சத்த குலகிரிகளையுந் தகர்த்து விட்டது. பெரிய திசைக்கரிகள் யாவற்றையும் வீரிட்டோடுஞ் சிறுபந்தெனும் படி மகிழ்ச்சியோடு விண்ணிலெறிந்து விளையாடியது. (ங)

p93

இந்த விதமாகப் "பல்பெருந் திருவாடல்கள்" புரிந்தருளிய துன்பமணவுமில் லாத அம்முழுமுதற் கடவுளான பெருமான், "எனது இலீலையினாற் சிதைவுற்ற எல்லாம் முன்புபோலவே பொலிவுறுவனவாக" என்று திருவுள்ளத்தெண்ணி, அவ்வாறே ஆக் கிய அவ்வற்புதப் பெருமையை அவனன்றி வேறெவர்தாங் கொள்ளவல்லார்! (ச)

p94

பின்பு, அழகு விளங்குகின்ற இயற்கையாகவே கடவுண் மணம் வீசுகின்ற திரு மேனியையுடைய இளம்பூரணனாகிய கடவுள், ஸ்ரீ மஹா கைலாஸத்தை யடைந்து ஆங் கமர்ந்திருக்குநாளில், "சிவபெருமானைக்குறித்து நாரதர் செய்கின்ற ஒரு யாகத்திற் செய்யு முறை தவறின காரணத்தால் அதனினின்றும் யாட்டுக்கடாவொன்று தோன்றியது. (ரு)

p95

தண்டையுஞ் சிலம்பும் அணிந்த கால்களோடு விளங்கும் அக்கடாவானது, தனது சிவந்த உடம்பைக் குலுக்கிக்கொண்டு எல்லாப் புவனமு நடுங்கும்படி விரைந்தார்ப்பரித்து வருகின்றது; அதனை அடக்கி யருளல்வேண்டும்" என்று மாட்சிமைவாய்ந்த தேவர்களும், முனிவர்களும் முருகப்பெருமான் சன்னிதியில் விண்ணப்பித்து அவனடிபணிந்தனர். (சு)

p96

அவ்வாறு வந்த யாட்டுக்கடாவை, வலிய அதன் உடற்பொலிவு அழியா வகையில் வீரபாகுதேவர் தம்முடைய கைகளாற் பிடித்துக்கொண்டு வருதலும், மக்களறிவிற்கு எட் டாததாகிய பிரணவத்தைத் தனது திருமேனியாகக் கொண்டுள்ள கந்தவேள், அதன்மேல் ஆரோகணித்து அதனுடைய நலத்தை அழிக்காமலே பல புவனங்களிலும் உலாவி வந்து, "இஃதெனது வாகனம்" என்று கூறியருளினன். (எ)

p97

அதுகேட்ட அக்கடாவும் அவ்வாறு வாகனமா யமர்ந்தபின்பு, சிவபெருமான் றிருவடிகளை மெய்யன்போடு மலர்களைக்கொண்டுருச்சித்து வணங்கி மிக்க களிப்புடன் சிவசன்னிதானத்திலிருந்து வெளியேவந்துகொண்டிருந்த அழகிய பிரமதேவன் சருவ வல்லமையும் பொருந்திய செவ்வேட்பரமன்றிருவடிகளை வணங்காது உதாசீனனாய் அப் பரமன திருக்கையினைக் கடந்துபோயினன். (அ)

p98

அங்ஙனஞ்சென்ற பிரமனைக் குகக்கடவுள் அழைத்து, "வேதத்தின் முற்பட் டுள்ள பிரணவத்தின் பொருளை இனிது கூறுவாயாக" என்று பணித்தருள; அவனும் "செவ்வனே படைப்புத்தொழில் நடாத்தும் நானே அதன்பொருள்" என்று கூறினன். கூறவே, அத்தனிமுதல்வன் அயனது தலைகள் புண்ணுறும்படி நன்கு குட்டினன். (கூ)

p99

குட்டியதோடு தனது தாளால் அவ்வயன துடம்பிலுமுதைத்து, "இவனுக்குப் பெரிய தளைகளைப் பூட்டித் தப்பவிடாது கொண்டுபோய்க் கந்தகிரியிலே சிறையிலிருத் துங்கோள்" என்று பணிக்க ; கணநாதரும் அவ்வாறே செய்துமுடித்தார்கள். (பின்னர்) அருணகிரிநாதர் புகழும்படியான ஒப்பற்ற முருகப்பெருமான், சருவேசுவரனாகிய சிவ பெருமானுக்கு அப்பிரணவத்தின் உண்மைப்பொருளை உபதேசக்கிரமத்தா லெடுத் துரைத்தனன்.

p100

க0

p101

திருக்கைலாயத்திருவிளையாடன் முதற்பத்துமுற்றிற்று.

p102

திருக்கைலாயத்திருவிளையாடல்.

p103

இரண்டாம்பத்து

p104

திருவடி தொழாாாறு பயன். எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். அடியொன்றற்கிருபத்தோரக்கரம். தந்த தனதன தந்த தனதன தந்த தனதன தந்தன.

p105

விண்டு வெழிலுடை யுந்தி வருமயன் வெம்ப லொடுசிறை சென்றபின் வண்டி லவன்வினை கொண்ட குகனைவ ணங்கல் விடுபவர் சண்டனூர் கண்ட பொழுதக மஞ்ச லுழிதரு கண்கண் மழைசொரி துன்பமுந் தொண்டை விரியவி ழுந்த லறுமொரு துன்பு மிறையும்வி டுங்கொலோ. (க)

p106

அம்பொ னயிலயி றங்கு கரனடி யன்பொ டனுதினம் வந்தியா வம்பர் மரணம டைந்து நடுவைவ ழங்கு நமனகர் கண்டகால் கும்பி யளறுகள் கிண்டு புழுவிறல் கொண்ட கடியுயிர் தங்கிடந் தும்பி யறைகள்கி டந்து பலபல துன்ப முறலும்வி டுங்கொலோ. (உ)

p107

துங்க விளமதி தங்கு சடையினர் தந்த சுரகுரு சுந்தரப் பங்க யவடிக ணம்பல் விடுபவர் பஞ்ச நமனகர் கண்டகால்

p108

செங்கை கழல்பல துண்டு படுபொழு தங்கண் மழைநனி சிந்தலும் வங்க ரெனமுக கஞ்ச நலிதலும் வந்தை கெடலுமி றுங்கொலோ.

p109

ங

p110

சிந்தை வெளிநடு நின்று நடமது தந்த ருளுமொரு செங்குகன் அந்திருவடியை நம்பல் விடுபவ ரந்த கனகரி கண்டகால் வெந்து தழலிடை மண்டை யுடையவி ழுந்து சுடுகறை சிந்தவுள் நொந்தி டுறவினர் கண்ட முதலுநு டங்க லுமொழிவு றுங்கொலோ.

p111

ச

p112

இன்சொன் மொழியினும் விஞ்சு கிளிமொழி யின்ப வுமையினி ளஞ்சுதன் நன்சொ னெறியினை நம்ப லிலர்கறை நன்று தெரிமறல் கண்டகால் வன்சொல் யமபடர் வந்து விழிசெவி மங்க வறைதலு மன்பிலாப் புன்சொ லடிபிடி தந்த கருவிகள் பொன்ற வயர்தலு நந்துமோ.

p113

ரு

p114

தான தனதன தான தனதன தான தனதன தானன.

p115

பீடு கெழுமயி லேறு மழகனை யாடு தகர்விடு பீடனை நாடு மனமிலர் ஞால வுயிர்களின் ஞாய நமனகர் மேவுகால் மோடு பிடர்தலை நாசி விழிசெவி மூர லிதழ்களை யூறுகாய் போடு படர்பலர் கீறு தொழிலொடு போழ்தல் புரிதலு மோவுமோ.

p116

சு

p117

வீர வமர்புரி வீர வவுணர்கள் வீர நகரினை மாகட னார முளமிழ வேசெய் குகனடி நாடு மனமிலர் காலனூர் சார மயமட னீடு கழுமுனை தாவு சுடுதரை மேவலுங் கோர விருணிலை தாப நளிர்நிலை கோட லுமொருவு மோவரோ.

p118

எ

p119

மாய வசுரர்கண் மாய வமர்புரி மாய சிவகுரு சீரலை வாயி லமரர்செய் பூசை கொளுமிறை மாண டிகினைநி லார்வரு தீயர் தமைமுனி பாச தரனகர் சேரு மமையம றாவுயிர்க் காய நனிசிதை வாக வுரலிடு காரர் தொழில்களு மோவுமோ.

p120

அ

p121

வாச நயமிகு நீப வணியணி மார்ப மொளிர்குக தேவனை ஈச னெனநினை யாது விலகிய வேசர் நமனகர் மேவுகால் பாச தரரெதி ராகி யுடல்வலி பாற விசிதர வாரலில் வீசு படர்தொழின் மார்பி லறைதொழில் வேலர் தொழில்களு மோவுமோ.

p122

தத்த தனதன தத்த தனதன தத்த தனதன தத்தன.

p123

மட்டில் புகழ்முனி நட்பு லவிர்குகன் மட்டு மலரடி விட்டகைத் துட்டர் முதுகிடை மொத்து நமனக ருற்ற பினரவர் தொக்கினை வெட்டி யுதிரந ரப்பு விளர்தசை யத்தி சருமம்வி லக்குநர் கிட்டி வருதலு நிற்ற லெஙன்மதி கெட்ட லையுமகி லத்தரே.

p124

க0

p125

திருக்கைலாயத்திருவிளையாடல்.

p126

இரண்டாம்பத்து

p127

திருவடிதோழாநூறு பயன்.

p128

திருமாலினது அழகிய நாபியிற் றோன்றிய பிரமதேவன் துன்புற்றுச் சிறை புக்கபின், அந்தப் பிரமனது குற்றமற்ற படைப்புத் தொழிலை மேற்கொண்ட குகபெருமானை அந்தப் பிரமதேவன் வணங்கத் தவறியவாறு தவறுவோர்கள், யமபுரத் தைக் காணநேர்ந்தபொழுது நெஞ்ச நடுங்குதலும், சுழலமிடுகின்ற கண்கள் அழுகைமழை பொழியுந் துன்பமும், தொண்டைவீங்கும்படி விழுந்தலறுந் துன்பமுஞ் சிறிதேனும் விட் டொழியுமோ? [ஒழியா என்றபடி.] (க)

p129

அழகிய பொன்மயமான கூர்மைவாய்ந்த வேலாயுதத்தினைத் திருக்கரத்தேந்தி யுள்ள முருகப் பெருமானுடைய திருவடிகளை அந்தப் பிரமதேவனைப்போல அன்போடு நாடோறும் வந்தியாத வம்பர்கள், மரணமடைந்து உயிர்கட்கு நியாயம் வழங்கும் யமதரும ராசனது நகரத்தைக் காணநேர்ந்த காலத்திற் கும்பியென்னு நரகத்திலும், புழுக்கள் குடை யும்படியான சேறுகளிலும், வன்மைமிக்க கடியுயிர்கள் தங்கிடங்களிலும், பலதிற வண்டு கள் செறிந்திருக்கும் இடங்களிலுங் கிடந்து மிகப் பலவாகிய துன்பமடைதலினின்றுந் தப்புவார்களோ? [தப்பார்கள்.] (உ)

p130

பரிசுத்தமான பிறைச்சந்திரன் தங்கியுள்ள சடாமண்டல மஸ்தக சிவபெருமான் தந்தருளிய சுப்பிரமணியனாகிய சுரகுகுருவின் அழகிய திருவடித்தாமரைகளை, அந்தப் பிரம தேவன் நம்பாது கைவிட்டவாறு விடுபவர்கள், விசாலம்பொருந்திய யமபுரத்தைக் காண நேர்ந்தபோது, (இறைவனை முன்னம் வணங்கலும் வலம்வரலுஞ் செய்யாத) அவர்தஞ் சிவந்த கைகளுங் கால்களும் பல துண்டாகத் தரிக்கப்படும்பொழுது அழகிய கண்கள் அழுதலால் நீரை மிகச் சொரிதலும், சண்டாளரைப்போல முகாரவிந்தம் வாடுதலும் பெருமை கெடுதலும் ஒழியுமோ? [ஒழியா என்றபடி.] (ங)

p131

ஆன்மாக்களுடைய இருதயாகாயத்தின் நடுவே நின்று தாண்டவம் புரிந்தருளுஞ் சோதி சொரூபனாகிய குகபெருமானுடைய அழகிய திருவடிகளை அந்தப் பிரமதேவன் நம்பாது கைவிட்டவாறு விடுபவர்கள், யமனது நகரத்தைக் காணநேர்ந்தபோது தமதுடம்பு நெருப்பில்வெந்து மண்டையோடு உடையவும் இரத்தஞ்சிந்தவுமாக விழுந்து உளம்வருந் தித் தமதுறவினரைக் கண்டழுதலும் வாடுதலும் நீங்குமோ? [நீங்கா என்றவாறு.] (ச)

p132

கிளிமொழியினும் இனிமை சிறக்கும்படியான இன்சொல்லையுடைய உமாதேவி யின் இளைய குமாரனுடைய பிரணவவேத மார்க்கத்தை அந்தப் பிரமதேவன்போல நம் பாதவர்கள், நன்று தீதுணர்ந்து உரிய நியாயங்கொடுக்கவல்ல யமனைக் காண நேர்ந்த போது கொடுஞ் சொற்களையுடைய யமபடர்கள் எதிரே தோன்றிக் கண்ணுங் காதுங் கலங்கும்படி அறைதலும் (இறைவனடியவர் திருவுள்ளம் வருந்த) இரக்கமற்ற இழி மொழிகளையும் அடிபிடிகளையு நல்கிய வாய்முதலிய கருவிகள் அழியும்படி செய்தலுங் குறையுமோ? [குறையா.] (ரு) வலிமை மிக்க மயிலின்மீது ஆரோகணிக்கும் அழகனும், நடனஞ் செய்யக்கூடிய யாட்டுக்கடாவை வாகனமாய்ச் செலுத்தும் பெருமையுடையவனுமாகிய குமாரக் கடவுளை அந்தப் பிரமதேவனைப்போல நாடு மனமொழிந்தவர்கள் மண்ணுலக வாசிகட்கு நியாயம் வழங்கும் நமனதுாரை நண்ணும்போது, (அப் பாபாத்துமாக்களுடைய) வயிறு, பிடர், தலை, மூக்கு, கண், காது, பல்லோடுங்கூடிய பாகம், உதடு என்னு முறுப்புக்களை ஊறுகாய் போடுகின்ற யமகிங்கரராகிய பலர் கீறலும் பிளத்தலுஞ் செய்தல் குறையுமோ?

p133

[குறையாது.]

p134

சு

p135

வீரயுத்தம் புரிந்த வீர அசுரர்களது வீரமாகேந்திரபுரியைப் பெரிய கடலின் நீரினுள் அமிழச் செய்த குகேசனுடைய திருவடியை அந்தப் பிரமனைப்போல நாடுமன மொழிந்தவர்கள் நமனூர் சேருங்காலத்தில், வலிமிகுந்த கழுமுனைகளையும் அனல்வீசிக் கொண்டிருக்கிற சுடுதகைகளையும் அடைதலும், பயங்கரமான இருட்டிடங்களையுங் காடுகளையுங் குளிர்மிக்க இடங்களையுந் தம்முடைய இருப்பிடங்களாகக் கொள்ளுதலும் நீங்குமோ? [நீங்கா.]

p136

எ

p137

மாயம்வல்ல அசுரர்கள் மாண்டொழியும்படி போர்புரிந்த எல்லா மாயமும் வல்ல சிவகுருநாதனும், திருச்செந்தூரின் கண்ணே தேவர்கள் செய்த பூசையை ஏற்றருளிய இறைவனுமாகிய அறுமுகச் சிவனுடைய பெருமைவாய்ந்த திருவடிகளை அந்தப் பிரம தேவனைப்போலத் தியானஞ்செய்யாதுள்ளோர் தனது முன்பாகவரும் பாவிகளைக் கோபிக்கின்ற யமனதுலகத்தைச் சேருங்காலத்தில், அழியாத உயிர்க்கூறைவிடமாகிய (சூக்கும உடம்பு செவ்வையாய்ச் சிதைவுறும்படி உரலிலிடுவோர் செயல்களுங் குறைவுறுமோ?

p138

[குறைவுறா.]

p139

அ

p140

வாசனையாகிய நயப்பாடு சிறக்குங் கடப்பம் பூமாலையும் ஆபரணமும் அழகிய திருமார்பில் விளங்கப்பெற்ற குகக்கடவுளைச் சருவேசுவரனென்றெண்ணாது (குறை வாகக்கருதி) அந்தப் பிரமதேவனைப்போல விலகிய (போலிச்சிவ) வேடதாரிகள் யமபட்ட ணத்தை யடையும்போது, பாசமேந்திய கிங்கரர்களெதிர்ப்பட்டு உடல்வலி நீங்கும்படிக் கான கட்டூதலைச்செய்து ; பின்பு எடுத்தெறியத்தக்க கிங்கரர்கள் எடுத்து நெருப்பிடை யெறியுஞ் செய்கையும், மார்பிலறையுஞ் செய்கையும், ஆயுதங்கொண்டு சிக்ஷிப்பார் செய்கையுங் குறையுமோ? [குறையா.]

p141

கூ

p142

நன்மதியிழந்து திரியும் உலகாயதர்களே ! எண்ணிறந்த திருப்புகழ்களைத் தம் முடைய பாடல்களில் வைத்துப் பாடிய அருணகிரிநாத முனீந்திரருடைய அன்பில் விளங்குகின்ற குகபெருமானுடைய வாசம் பொருந்திய திருவடிமலர்களை அந்தப்பிர மனைப்போல அவமதித்துத் தள்ளிவிட்ட சிறுமைக்குணமுடைய துட்டர்கள், பாவிக ளுடைய முதுகிற் புடைக்குந்தொழில் நிகழுங் காலனூர் சேர்ந்தபின்னர், அவர்களுடைய உடம்பைவெட்டி, இரத்தம், நரம்பு, நிணம், தசை, எலும்பு, தோல், என்னுமிவற்றை வெவ்வேறுக்குந் தொழிலையுடைய யமபடர்கள் நெருங்கி வந்தவுடன் அவர்கட்குத் தப்பி நிற்குமாறும் யாங்ஙனம்? [இல்லை யென்றபடி.]

p143

க0

p144

திருக்கைலாயத்திருவிளையாடல் இரண்டாம்பத்து முற்றிற்று. மூன்றாவது திருக்கந்தகிரியிற் பட்டாபிடேகத்திருவிளையாடல்.

p145

கலிவிருத்தம். சீர்முழுதொன்றிய சிறப்புடைத் தலையாகெதுகை. அடியொன்றற்குப்பன்னீரக்கரம்.

p146

ஏரா ருங்குழ வன்றக ரேறுமுனே பாரர ரேமவி லங்கலி லேபனிகொள் தாரா ரிந்திர னாதிய ராவிதடிந் தோரா நெஞ்சுடை நீவிரு யிர்த்தெழுமின். (க)

p147

என்றா னன்னணம் வந்தெதிர் நின்றவர்முன் நன்றா யென்னைய றிந்துந லம்பெறுவீர் என்றா ரண்டமெ லாமமர் பேருருவாய் நின்றா னர்த்தப தம்வரை கண்டனரால். (உ)

p148

கண்டா ருண்மக வானிகல் சூர்களையா அண்டா காவென வன்னது செய்வலெனா வண்டா ரேகனு ரைத்தலும் வானவர்சீர் கொண்டா ரென்னவு ளங்குளிர் வுற்றனரே. (ங)

p149

அவ்வா றாமணி மாயவ னாதிசுரர் செவ்வா னோனொடு திண்கயி லைக்கருகே எவ்வா கந்தபு மெண்ணின்மு டிக்கிரியாய் உவ்வா ருள்ளென மின்னிட னுற்றனரால். (ச)

p150

அங்கா ராடக வாலய நள்ளிடையோர் சிங்கா ரத்திரு வாளரி பீடமிடா மங்கா வீசன்ம கன்றனை நீயிதிலே தங்கா யென்றனர் தங்கின னேயவனும். (ரு)

p151

மாசா ராவிக ளுய்திவ ழங்குநெறித் தேசா ராதிம றைக்கரை கண்டதிரு வீசா நின்றவ சிட்டன்மு தல்விளியாத் தேசா ரந்தணர் வந்தனர் செய்தொழுதார். (சு)

p152

வாலே றண்டம காவுத கங்கொடவர் நூலே றெண்சொனு வன்றுகொ டேமுருகுங் கோலே றுங்குக னுக்கபி டேதமிழைத் தேலே றம்முடி யுஞ்சிர சிட்டறைவார். (எ)

p153

எஞ்சா வேதம்வ ழுத்துமி ரும்பொருளே மஞ்சா ரித்திரு மான்முதல் வாகினிகட் கஞ்சா ரும்பதி நீயினி யென்றவர்கள் நெஞ்சா ரச்சொல வொப்பின னீள்விறலோன். (அ)

p154

சேனா னீசக மாகுரு வென்றுதிரு மானா சுத்தரி றைஞ்சினர் வன்முருகும் ஆனா வெண்கிரி புக்கதன் னாரெவருங் கானா ராசினி காமரில் லெய்தினரால். (கூ)

p155

வல்லார் கந்தன மர்ந்தமை யாலவ்வரை வில்லார் கந்தப ருப்பத மாம்விபுதர் கல்லார் நெஞ்சொடு சேயையெ திர்த்தகதை சொல்லார் விற்புகல் வேனொலி யற்றெழுவீர். (க0)

p156

கூறி, நிறைந்துள்ள அண்டங்கள் யாவும் தன்மாட்டமர்ந்துள்ள மகா விசுவரூபங்கொண்டு நின்றனன். தேவர்கள் அவ்வுருவத்திற் பாதிக்கால் (=முழந்தாள்) அளவுமட்டுமே தரி சித்தனர். (உ)

p157

அவ்வாறு தரிசித்தவர்களுள்ளே, தேவேந்திரன் (பெருமானை நோக்கி) "சரு வாண்டங்களுள்ளும் நிறைந்திருக்குங் கடவுளே! எங்களைப் பகைத்த சூரபதுமனாதி யோரை அழித்து எங்களைக் காத்தருள்வாயாக" என்று விண்ணப்பித்தவுடன், வளப் பம் பொருந்திய (கடப்பம்) பூமாலையை அணிந்த தனிப் பரம்பொருளாகிய கந்தனும், "அவ்வாறு செய்வேம்" என்று வாக்களித்தவுடன், தேவர்கள் அப்போதே இழந்த நலம் யாவும் பெற்றவர்போல மனங்குளிர்ந்தார்கள். (ங)

p158

அவ்வண்ணம் உள்ளக் களிப்பெய்திய நீலநிறத்திருமால் முதலிய தேவர்கள், தேஜோமயனாகிய முருகவேளோடு வலிமை பொருந்திய திருக்கைலாயத்திற் கணித் தாய்க் குற்றமேதுமற்ற கொடுமுடிகள் பலவற்றோடுங்கூடிய பருவதமாய்த் தபோதனர் நெஞ்சுபோலப் பரிசுத்தமாய் விளங்கு மோரிடத்தை யடைந்தனர். (ச)

p159

அங்குப்பொருந்திய ஒரு பொற்கோயிலின் நடுவிடத்தே அவர்கள் ஒரு அழகிய சிங்காசனமிட்டு மூப்பிறப்பறியா முருகவேளை நோக்கித் "தேவரீர் இதன்மீ தெழுந்தரு ளல்வேண்டும்" என்று வேண்டினர். அவனும் அவ்வாறு செய்தனன். (ரு)

p160

மும்மல வழுக்கு மூடப்பெற்ற ஆன்மாக்களுக்குப் பேரின்ப நெறிகாட்டுஞ் சிறப் புடைய பழைய வேதமாகிய கடலின்கரையைக் கண்ட சிறப்புமிளிர்கின்ற வசிட்டர் முத லாகவுள்ள பிரமதேஜசுடையார் பலர், அங்குவந்து பாலரூபப்பெருமானடி பரவினர். (சு)

p161

அவர்கள், பரிசுத்தமான ஆகாய கங்கை நீரைக்கொண்டு நல்ல வேத மந்திரங் களைச் சொல்லிக்கொண்டே அழகிய செங்கோலேந்தி விளங்குங் குகபெருமானுக்கு அபிடேகித்து, ஒளிமிக்கதோர் அழகிய கிரீடத்தையும் அவனது திருமுடிக்கணிந்து பின்வருமாறு சொல்லத் தொடங்கினர். (எ)

p162

"அழிவறியா வேதங்கள் துதிக்கும் பரம்பொருளே! மேகநிற மேனியனாகிய இந்தத் திருமால் முதலிய தேவசேனைகளுக்கு இனிமேல் ஏற்றபதி தேவரீரேயாவீர்" என்று மனமார விண்ணப்பிக்க; முடிவிலாற்றல் படைத்த முருகவேளும் அதற்கிசைந் தருளினன். (அ)

p163

சேனானீ (=சேனைத்தலைவ!) மகாஜகத்குரு! என்று கூறிக்கொண்டு திருமா லும் ஏனைய விண்ணவர்களும் பணிந்தனர். எல்லா வல்லமையுமுடைய முருகவேளும் குறைவொன்றுமில்லா வெள்ளியங்கிரிக்கு எழுந்தருளியது. மற்றையோரும் விண்ண கத்தையும், கானகத்தையும், அழகிய இல்லங்களையும் அடைந்தனர். (கூ)

p164

வலிமைவாய்ந்த கந்தக்கடவுள் அமர்ந்தருளிய காரணத்தால் அம்மலைக்கு ஒளி மிக்க கந்தகிரி யென்னும் பெயரெய்தியது. அருணகிரிநாதனாரடிதொழு மன்புடை யீர்! இனி, அத்தேவர்கள் கன்னெஞ்சினராய்க் கந்தவேளை யெதிர்த்த அக்கதையை விருப்பத்தோடு (விளக்கிச்) சொல்லக்கடவேன். (க0)

p165

திருக்கந்தகிரியிற் பட்டாபிடேகத்திருவிளையாடன் முற்றிற்று. நான்காவது மேருகிரித்திருவிளையாடல்.

p166

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். சதாக்கரம். (நூறெழுத்து)

p167

தனனதன தந்தா தனனதன தந்தா தனனதன தந்தா தனதான.

p168

அரநயனம் வந்தோ நிதிIndex கிரிIndex யினின்றே யதனுடைய வன்கோ டுகள்பேரா விரிதிசையெ றிந்தா தலொழிய வென்றே விபுதர்பதி விண்கா வலர்சூழ விரைவினவண் வந்தே சதமுனையெ றிந்தான் விறல்கொளது வெந்தே பொடியாகி இரிவதுமு ணர்ந்தா ரிவனொருசி றந்தோ னெனமிகவு நொந்தா னுலகீரே.

p169

க

p170

திகழ்கிரியை யுஞ்சேய் கிடுகிடென வங்கேயெ செயலுணரும் விண்கோ தனதானை இகலுடையொ ரம்பான் மடிதலும றிந்தா னிதயமிக வெந்தா னதன்மேலே பகவதியி னங்கான் முளைவிடுமி ரண்டோ டுறுசரமி ரண்டான் முடிபாடார் துகில்பரமி ழந்தா ருணர்வையும கன்றேர் சுடர்நிலம்வி ழுந்தா னுலகீரே.

p171

உ

p172

உலகுயிரி ருந்தூ னுடலினைவி டுங்கா லுயிர்கவரும் வன்றோ ணமனானோன் பலபடைகள் கொண்டே சமரிடுதல் கண்டே பரமபதி யின்சே யிலைபோலும் அலகுகளி லைந்தே விடவவையு டம்பே றிடலுமவ னொந்தே யறிவேபோய் நிலமிசைநெ டுங்கார் மலையெனவி ழுந்தா னிசநெறிவி ரும்பே ருலகீரே.

p173

ங

p174

அளவையில டங்கா வுருவெவையும் வெந்தே யழியவனை யுந்தே வெனுமாரல் உளநனிவெ குண்டே சமர்தரலு நந்தா வொருவன்மக னஞ்சா வலியோடு மிளிர்சரமி ரண்டோ டொருசரமொ ருங்கே விடலுமவை வந்தே யுடரூவி வளைபொழுது ளந்தான் வெருவவெரி யென்பான் வரையெனவி ழுந்தா னுலகீரே.

p175

ச

p176

மணியலையெ றிந்தே மிளிர்புனலு நன்காள் வருணனும்வெ குண்டோர் வலிபேசித் துணிதலைய றிந்தோ ர நொடியினிலி ரண்டோ டொருசரமி ரண்டால் விறல்சோர உணர்வதுமி ழந்தே விழவவனை வென்றா னொருவன்விழி வந்தோ னுயர்வாழ்வை அணவநசை கொண்டா ரடைவதும வன்றா ளறிதிரறி யுஞ்சீ ருலகீரே.

p177

ரு

p178

மலையெனவி யங்கா வெதனையும சைந்தா டிடவயர ரும்பா டுடைவாயு அலைவுடனெ ழுந்தே சமரதுபு ரிந்தா னவனையுமி ரண்டா சுகமேவி குலைநனிகு லைந்தே விழவவனம் வென்றா னொருகுடிலை விஞ்சோ ருருவானோன் கலைபலதெ ரிந்தே மனவெளிய ணைந்தோர் கருதரன வன்றா னுலகீரே.

p179

சு

p180

உயிர்களக மும்பே ரகிலமும்வி ளங்கே ணுடையிரவி யென்பான் வலிபேசி எயிறுநனி தின்றே பொருதெனவெ ழுந்தோ ரிணையில்கம ரந்தா னயர்போது கயிலையிறை வன்சேய் சிறுமுறுவல் கொண்டே கணைகளிலி ரண்டே விமனாதி செயல்களற வென்றா னவனையுமி ருஞ்சீர் தெரியமுய லுஞ்சீ ருலகீரே.

p181

எ

p182

அமுதகர னஞ்சான் மதிநனிவெ குண்டே யமர்தரவ வன்றோள் வலிமாழ்கி நிமிடமுள்வி ழுந்தோ வறவுமொருச ரந்தான் விடுவினைபு ரிந்தா னிகழேனை அமரரும்வி ழுந்தோ வுறவொருச ரஞ்சீ றளவையில்வி டும்பே ரளியானாய்ச் சமரிலவ ணஞ்சே யுருவிறைபு ரிந்தா னெனலறிதி ரன்பார் தரையீரே.

p183

அ

p184

சொனபடியி ளங்கோ வெனமிளிரு மெங்கோ சுரகிரியி னின்றே விளையாடு வினைகுருவ றிந்தோ டிவருகைபு ரிந்தோம் விமலசிவ வென்றே புகழ்போது அனைவருமெ ழுந்தே வருதிரென லுங்கா ணவர்களுளம்வி ழுந்தே பணிபாதன் எனவறிதிர் கந்தா சலனையுய ரின்பே ணெழில்களைவி ரும்பே ருலகீரே.

p185

கூ

p186

சிவசதனி ருஞ்சூர்கடிமுதல்வன் மஞ்சார் சிகியனவ னன்பா மருளால்வே றெவரையும்வ ணங்கே னெதனையும்வ ணங்கே னெனுமுறுதி கொண்டே னிதுதானே இவறல்வலி வென்றே புகழ்பலபு கன்றே னெனுமருணை யின்பே ருடைநாதன் நுவலுநெறி யிங்கே யிதினுமுயர் வின்றே நொசிவறுபெ ருங்கே ளுலகீரே.

p187

க0

p188

றான். பின்பு, பார்வதிதேவியின் இளைய திருக்குமாரனாகிய முருகவேள் ஏவிய நான்கு அம்புகளால் இந்திரன் தனது கிரீடம், பெருமைவாய்ந்த கொடி, கவசமென்பவற்றையு மிழந்து ஆர்ந்த உணர்வையு மிழந்து அழகிய காந்தியோடு விளங்கும் அந்நிலத்தில் விழுந்தான்.

p189

உ

p190

உண்மை நெறியை விரும்பும் நன்மைவாய்ந்த உலகத்தோர்களே ! பூமியில் ஆன் மாக்கள் தமது உடம்பைவிட்டுப் பிரியும்போது அவற்றைப் பிடித்துச் செல்லும் வலிய தோள்களையுடைய யமன், பல ஆயுதங்களைக்கொண்டு சண்டை செய்வதைச் சிவகுமா ரன் பார்த்து, இலைபோலுள்ள அம்புகளில் ஐந்தை ஏவ; அவை, யமனுடம்பிலே தைத்தவுடன் அவன் நிலைகுலைந்து அறிவழிந்து பெரிய நீலகிரி யென்னும்படி தரை மேல் விழுந்தான்.

p191

உயர்ந்தோர்களே ! எண்ணிமுடியாத பல்வேறு உருவுடைப் பொருள்களும் வெந்து நீராகும்படி சூழ்பவனாகிய அக்கினிதேவன் கடுஞ்சினத்துடன் போர்புரி யத் தொடங்கினவுடன், ஈறிலாப் பரமசிவ குமாரன் அஞ்சாத ஆற்றலோடு ஒளியினைச் செய்கின்ற மூன்று பாணங்களை ஒருங்கே விட்டமாத்திரத்தில், அவை வந்து அக்கினி தேவனது உடம்பைத்தாவி வளைந்துகொண்டவுடனே, அவனும் நெஞ்சிலே திகில் கொண்டு மலைபோலக் கீழே வீழ்ந்தான்.

p192

ச

p193

உண்மையறியுஞ் சிறப்புடையை உயர்ந்தோர்களே ! முத்தம் பவள மென் பன கொழிக்கும் அலைகளைவீசி விளங்கும் நீரை இனிது ஆள்பவனாகிய வருணதேவ னுஞ் சினந்து வஞ்சினங்கூறிப் போர்க்கெழுதலைக் கண்டு, பரமசிவனது நெற்றிக்கண்ணி னின்று வெளிப்பட்ட அப்பாலன், ஒரு கணத்திலே நான்கு அஸ்திரங்களால் அத் தேவனது திறனொடுங்கி உணர்வழிந்து கீழே விழும்படி செய்தித்தான். சீவவாழ்க் கையை ஒதுக்கிச் சிவவாழ்க்கையை அடைய விரும்புவோர் போய் அடைவதும் அச் சிவகுமாரனுடைய திருவடிகளே யென்று அறிவீர்களாக.

p194

மலைகளெனவிருந்து இடம்பெயராத எப்பொருளும் நிலம்பெயர்ந் தசைந்தாடும் படி சாடும் பேராற்றல் படைத்த வாயுதேவன், ஆர்ப்பரித்தெழுந்து போர்புரிந்தான். பிர ணவசொரூபனான சுப்பிரமணியனும் அவன்மேல் இரண்டம்புகளை ஏவி அவன் இத யத்தானமானது பெரி துங்கலங்கி நிலத்தில் விழும்படி அப்போது வென்றான். மேலோர் களே ! அவனே, சகல சாத்திரங்களையுமுணர்ந்து சிதாகாசத்தைச் சேர்ந்தவர்கள் தியா னிக்குஞ் சிவன்.

p195

சு

p196

இறைவனுடைய அளப்பருஞ் சிறப்புகளை அறிய முயலுஞ் செம்மைவாய்ந்த பெரியோர்களே ! சீவராசிகளின் நெஞ்சத்திலும் பெரிய புவனங்களிலும் விளங்கும் பெருமைபடைத்த சூரியன், வன்மைகள் பேசிப் பல்லை நறுநறெனக் கடித்துப் "போர் கொடாப்" என வெழுந்து சமானமற்ற பெருஞ்சண்டை நிகழ்த்தியபோது, குமார பெருமான், புன்னகை செய்து இரண்டம்புகளை விடுத்து மனம் முதலிய திரிகரணங் களும் ஒடுங்கிப்போம்படி அவனையும் வெற்றிகொண்டான்.

p197

எ

p198

அன்புடையுலகீர் ! பின்பு, அமுதம் பொழியுங் கிரணங்களையுடைய சந்தி ரன் மிகவும் வெகுண்டு போர்செய்ய; குழந்தை யுருவோடுள்ள இறைவன், எதிர்த் தோனது தோள்வலிகுன்றி ஒருகணத்திற் கீழே வீழ்ந்தொடுங்கும்படி ஒரு அம்பை எவினான். ஆங்குக் காணப்படுகின்ற மற்றைய தேவர்களும் தரைமிசை வீழ்ந்து கிடக் ஐந்தாவது திருக்கந்தகிரியிற் சிருட்டிகாரியத்திருவிளையாடல்.

p199

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

p200

சிறப்புடை அடியெதுகை.

First 200 of 3,516 passages. Read on

See also: more in Technical treatises, astronomy, astrology and erotology

Discussed in 1 studies in Pramāṇa (listed on the page).