Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p142

Kumārasvāmīya p142

Language
Tamil

p142

நன்மதியிழந்து திரியும் உலகாயதர்களே ! எண்ணிறந்த திருப்புகழ்களைத் தம் முடைய பாடல்களில் வைத்துப் பாடிய அருணகிரிநாத முனீந்திரருடைய அன்பில் விளங்குகின்ற குகபெருமானுடைய வாசம் பொருந்திய திருவடிமலர்களை அந்தப்பிர மனைப்போல அவமதித்துத் தள்ளிவிட்ட சிறுமைக்குணமுடைய துட்டர்கள், பாவிக ளுடைய முதுகிற் புடைக்குந்தொழில் நிகழுங் காலனூர் சேர்ந்தபின்னர், அவர்களுடைய உடம்பைவெட்டி, இரத்தம், நரம்பு, நிணம், தசை, எலும்பு, தோல், என்னுமிவற்றை வெவ்வேறுக்குந் தொழிலையுடைய யமபடர்கள் நெருங்கி வந்தவுடன் அவர்கட்குத் தப்பி நிற்குமாறும் யாங்ஙனம்? [இல்லை யென்றபடி.]