Kumarasvamiya p157
Kumārasvāmīya p157
- Language
- Tamil
p157
அவ்வாறு தரிசித்தவர்களுள்ளே, தேவேந்திரன் (பெருமானை நோக்கி) "சரு வாண்டங்களுள்ளும் நிறைந்திருக்குங் கடவுளே! எங்களைப் பகைத்த சூரபதுமனாதி யோரை அழித்து எங்களைக் காத்தருள்வாயாக" என்று விண்ணப்பித்தவுடன், வளப் பம் பொருந்திய (கடப்பம்) பூமாலையை அணிந்த தனிப் பரம்பொருளாகிய கந்தனும், "அவ்வாறு செய்வேம்" என்று வாக்களித்தவுடன், தேவர்கள் அப்போதே இழந்த நலம் யாவும் பெற்றவர்போல மனங்குளிர்ந்தார்கள். (ங)