Kumarasvamiya p193
Kumārasvāmīya p193
- Language
- Tamil
p193
உண்மையறியுஞ் சிறப்புடையை உயர்ந்தோர்களே ! முத்தம் பவள மென் பன கொழிக்கும் அலைகளைவீசி விளங்கும் நீரை இனிது ஆள்பவனாகிய வருணதேவ னுஞ் சினந்து வஞ்சினங்கூறிப் போர்க்கெழுதலைக் கண்டு, பரமசிவனது நெற்றிக்கண்ணி னின்று வெளிப்பட்ட அப்பாலன், ஒரு கணத்திலே நான்கு அஸ்திரங்களால் அத் தேவனது திறனொடுங்கி உணர்வழிந்து கீழே விழும்படி செய்தித்தான். சீவவாழ்க் கையை ஒதுக்கிச் சிவவாழ்க்கையை அடைய விரும்புவோர் போய் அடைவதும் அச் சிவகுமாரனுடைய திருவடிகளே யென்று அறிவீர்களாக.