Kumarasvamiya p223
Kumārasvāmīya p223
- Language
- Tamil
p223
பேரருளாளர்களாகிய இவர் திருமுன்பு பிரமன்வந்து அடிமைத்திறம் பேணி வணங்கி, அறிவிழந்து அறியாமை வயப்பட்ட சிறியேனுக்கு அனுக்கிரகஞ்செய்தருளல் வேண்டுமென்று குறையிரந்தவுடன் தெளிந்த வுள்ளத்துத் தவசிகள் வணங்கு முதல்வனாம் முருகன், "நீ உனது தொழிலைச்செய்து வாழக்கடவாய்'' என்று கூறியருளினான். (அதுகேட்ட) பிரமனும் களிப்புற்றுத் தனதுருக்கை சேர்ந்தான். அஞ்ஞான மிகுந்த அகத்தினர் காணா அமல சிவபெருமானும் பெரிய கயிலைக் கெழுந்தருளினன்.