Kumarasvamiya p26
Kumārasvāmīya p26
- Language
- Tamil
p26
பிளக்கப்பட்ட அவை, கந்தக் கடவுளுக்கு (மயில்) வாகனமாகவுங் (கோழிக்) கொடி யாகவும் விளங்கின. இப்பால், சுயம்புவாகிய அறுமுகச் சிவன், தன்னாலாளப்படுந் திருப் பரங்கிரியை யடைந்து, அருணகிரிநாத சுவாமிகள் புகழும்படியான, வாள்போன்ற கண்ணையுடைய தெய்வயானைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொண்டு இந்திர னுக்கு முடிசூட்டுதலால் விண்ணுலகை யிரக்ஷித்து, தான் ஆண்டுகொள்ளற்குரிய வேடர் குலமாதாய்த் தோன்றிய வள்ளிப்பிராட்டியையுந் திருமணங்கொண்டருளினான்.