Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p65

Kumārasvāmīya p65

Language
Tamil

p65

(கேட்குந்திறனுடையீர்!) இச்சண்டைகளின் பெருமையை இன்னுங்கேளுங்கள். இக்குழந்தைகள், தம்முடைய இரண்டு அகப்பாதம், மேற்புறம், முதுகு, கணையொத்த கணைக்கால், முழங்கால், வலியவிரல், ஒளிபொருந்திய கைத்தலம், சென்னி, மார்பு, கழுத்து என்னும் இவ்வுறுப்புக்களையே படைக்கலங்களாகக்கொண்டு தாக்கி வீறிநின்றன.