Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p91

Kumārasvāmīya p91

Language
Tamil

p91

(அவ்வறுமுகக் குழந்தைக்கு) உமாதேவி தன்றிருப்பயோதரப் பாலையூட்ட அதுவு முண்டது. பின்னர் அது, பார்வதி பரமேச்சுவரரோடு ஒள்ளிய திருக்கைலாய மலையை யடைந்தது. அங்கு நலங்கள் எவற்றினுந் திருத்தமுற்ற குழந்தைப் பருவத்து (மாணிக்க நிறமுடைய வீரபாகு, தரள நிறமுடைய வீரகேசரி, புட்பராக நிறமுடைய வீரமகேந் திரன், கோமேதக நிறமுடைய வீரமகேசன், வைடூரிய நிறமுடைய வீரபுரந்தரன், வயிர நிறமுடைய வீரராக்கதன், மரகத நிறமுடைய வீரமார்த்தாண்டன், பவள நிறமுடைய வீராந்தகன், நீல நிறமுடைய வீரதீரனெனும் பெயரிய) நவவீரர்களோடும் இலக்ஷம் வீரர் களோடும் பின்னமில்லாப் பிரியத்தோடு நேயமுங் கொள்வதாயிற்று அக்குழந்தை. (உ)