South India and her Muhammadan Invaders c14.s1.45
South India and her Muhammadan Invaders c14.s1.45
- Language
- English
c14.s1.45
பூமலர் வளர்திகழ் திருமகள் புகழகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர்கலை வஞ்சி நலமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறன்மந்தை திருத்தொளின் மிசைவாழ விமையவர் கோனன்றிட்ட வேழிலாரங் கழுத்திலங்கப்
5. பகீரதிபோல் துய்யபுகட் படர்வல்லி கொழுந்தொட்டத் திகிரிவரைக்கப் புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டா(ர்ம்)......ணிக்கவிதை(க)தெண்டிரைகுழ் பாரிழற்ற வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண் டிசைநடப்பச் செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படைய
10. திறற்புவிபோய் வனமடையக் கயலிரண்டு நெடுஞ்சிகரக் கனவரையில் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோ ரைவ்வேள்வி யாறங்க முடன்சிறப்ப வருந்தமிழு மாரியமு மறுசமயத் தறநெறியுந்
15. திருந்துகின்ற மனுநெறியுந் திரம்பாது தழைத்தோங்கக் குச்சரரு மாரியருங் கோசலருங் கொங்கணரும் வச்சிரருங் காசியமொத் தாற...மனருஞ் சோனகரு வந்தியரு முதலாய விருநிலமா முடிவேந்த ரிறைஞ்சிகின்று திறைகாட்ட (வ)டிநெடு வாளும் வயம்பெரும் புரவியுந்
20. தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனுந் தானையுஞ் செருக்களத் தொழிய வார சும்புலரா மவலநாடு நூறிப் பருமா மரபிற் பொருந்திறல் மிக்க சென்னியைத் திரைகொண்டு திண்டோள் வலியிற 25. பொன்னி நாட்டுப் போசலத் தரைசர் களைப்புரி......டைத்துப் பொங்கு வீரப் புரவியுஞ் செருவிரல் ஆண்மை சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தானையு மழிபடத் துண்டித் தளவில் சோரி வெங்கலிப் பெரும்பிணக் குன்ற மிருங்கன் னிறைத்துப் 30 டருந்துங் காகமும் பாறுங்......... அமரந்து மகிழ்ந்தால் அமர்சள மெடுப்பக் கம்......ணயுங்கனைப் புரவியுஞ் செம்பொற் குலையுந் திகழ்கதிர் மணியு மடந்தையு
35. ராரம ரர்பு முடன் கவர்ந்தருளி முதுகிடு போசளன் றன்னொடு முனையுமது தவறென்னை பொற் பொற்றி நட......து போலுட் பகையாய் நின்ற சேரனைக் கொன்று சின......ணிந் தருளிப்
40. நண்ணுதல் பிறறா லெண்ணுதற் கரிய கண்ணணூர்க் கொப்பத்தைக் கைக்கொண்டருளிப் பொன்னி சூழ் செல்வப் புனனாட்டைக் கன்னி நாடெனக் காத்தருள் செய்யப் பெருவரை யானிற் பின்னகருக் காக்கிய
45. கருநட ராஜனைக் களிறு திறைகொண்டு துலங்கொளி மணியுஞ் சூழ் வேழமு மிலங்கை காவலன யிறைகொண்ட ருளி வருதிறை மறுத்தங் கவனைப் பிடித்துக் கருமுகில் நிகளங் காலிற் கோத்து
50. வேந்தர் கண்டறியா விற்றின் புரிசைச் செந்த மங்கலச் செழும்பதி முற்றிப் பல்லவ னடுங்கப் பலபோ ராடி நெல்வினை நாடு நெடும்பெரும் பொன்னும் பருமை யானையும் பரியு முதலிய
55. வரசுரிமை கைக்கொண்டு ரசவற் களித்துத் தில்லையம் பலத்துத் திருநடம் பயிலுந் தொல்லை யிறைவர் துணைக்கழல் வழங்கிச் குளிர்பொழில் புடைசூழ் கோழிமான் காளி செறி வேம்பி ணணிமலர் கலந்த
60. தொங்கல வாகைத் தொடைகள் சூட்டித் திங்களுர் மரபு திகழ்வந் திருந்த தன் . . . . . சையா னன்னிலை விசையம் பிண்ண..........ன்னக்கலை தேரின்மொழிப் பாவலர் மண்ணின் மேலுழி வாழ்கென வாழ்த்தக் 65. கண்டவர் மனமுங் கண்ணுங் களிப்ப வெண்டி ரைமகர வேலைபி னெடுவரை யாயிரம் பணைப்பணத்த நந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரமஞ்........கத் தொருபெருங் கடவு ளுவந்தினி துறைபு
70. மீபெருங் காவிரி யிடைநிலத் திலங்குந் திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்ப பன்முறை மணிதுலா பார மேறிப் பொன்மலை யென்னப் பொலிந்து தோன்றவும் பொன்மேய்ந் தருளிய செம்பொற் கோயிலும்
75. வளர்திகழ்மா லுதய வெற்பனைத் திருவளர் குலமணி சிங்கா சனமிசை ம........த கலையென மகிழ்ந்தினி தெறித்தி நகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும் கனகமா முடி கவின்பெறச் சூடிப்
80. பாராள வேந்த ருரிமைய ரிவைய ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்த வாடையு மலையுத் தென்றலு மந்தளிற் கரங்கொண் டசைய வீச வொருபொழுது விடா துடனிருந்து மகிழும்
85. திருமக ளன்னத் திருத்தோள் மேவி யொத்த முடிசூடி யுயர்பே ராணை திக்கெட்டும் நடப்ப செழுந்தவஞ் செய்த விவன்போ லுலகிலே வீரன் பலபத்திர மதிமுகத்தவணிமாம களிலகு கொடி காதல்மு சூழ்ந்து நின்றேத்து முலகு முழுதுமு
90. டையாளோடும் வீற்றிருந்தருளிய ஸ்ரீகோச்சடைப்ப ன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண் டிய தேவர்க்கு யாண்டு.