Parandappadi p214
Parandappaḍi p214
- Language
- Sanskrit
p214
ஆகையாலே, அநாதிகாலம் தான் பண்ணிப்போந்த அபராதங்களைப் பொறுத்தருளவேணுமென்று விண்ணப் பஞ்செய்யும்போது அந்த:புரபரிகரமாய்கின்று விண்ணப்பஞ் செய்யவேண்டுகையாலே, ஸர்வஜ்ஞனான ஈஸ்வரனையுங் கூட நிருத்தரனாம்படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விஸேஷங்களாலும், b “பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு” என்றும், c “மலராள் தனத்துள்ளான்” என்றும், d “மாமலர் மங்கை மணநோக்கமுண்டான்” என்றும், e “அல்லிமலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்குமம்மான்” என்றும், தன்னுடைய போக்யதாப்ரகர்ஷத்தாலும் மற்றுமுண்டான உசிதோபாய விஸேஷங்களாலும் சேதநனுடைய அப ராதங்கள் ஈஸ்வரன் திருவுள்ளத்தில் படாதபடிபண்ணி அநாதிகாலம் அகன்று போந்த இருவரையும் சேர்க்கக் கடவதாயிருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று.