Parandappadi p67
Parandappaḍi p67
- Language
- Sanskrit
p67
யதயா ப்ரஸ்துதமான ஸ்வாதந்த்ர்யம் படிகவதேக ஸாதந தைகவேஷமான ஸ்வஸ்வரூபத்துக்கு விரோதியாய், ஸ்வ ரக்ஷணத்தில் ஸ்வாந்வயத்துக்கு ஹேதுபூதமாயிருப்ப தொன்றிறே. தாத்ருஸமான ஸ்வாதந்த்ர்யம் நிவ்ருத்த மாகையாகிறது - 'ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் ஸ்வரூப ஹாநி' என்றறிகையிறே. ஸ்வஸ்வரூபம் - ஈஸ்வரனைக் குறித்து அத்யந்த பரதந்த்ரமாயிருக்கையாலே, ஸ்வரக்ஷ ணத்தில் தனக்கு அந்வயமுண்டானால் ஈஸ்வரனைக்குறித்துத் தனக்கு அத்யந்த பாரதந்த்ர்யமின்றிக்கேயொழியுமாகை யாலே, ஈஸ்வரைகபரதந்த்ரதாவிரோதியான ஸ்வரக்ஷணத் தில் ஸ்வாந்வயம் நிவ்ருத்தமானால், பின்னை அந்வயமுள்ள து அகாரத்திலே ஸ்வரக்ஷகதயா ப்ரஸ்துதமான ஈஸ்வரனுக்கே யாகையாலே அவனுடைய உபாயபாவம் இவ்வழியாலே இதிலே ப்ரஸ்துதமாம்; ஸ்வரக்ஷணத்திலே தான் அதிக ரித்தாலிறே ஈஸ்வரன் கைவாங்கியிருப்பது. தன்னுடைய ரக்ஷணத்திலே தான் கைவாங்கினால் கஜேந்த்ரரக்ஷணம் பண்ணினாற்போலே த்வரித்துக்கொண்டு இவனுடைய ரக்ஷணத்திலே அதிகரிப்பான் ஈஸ்வரனிறே. இப்படி ஆர்த்தமாக ஈஸ்வரனுடைய உபாயபாவம் ஸித்திக்கை யன்றிக்கே, 1. ''நமஸ்சக்ருர் ஜநார்தநம்'' என்கிறபடியே ஸ்தானப்ரமாணத்தாலே நமஸ்ஸப்தத்துக்கு ஸரணஸப்த பர்யாயத்வமுண்டாகையாலே ஸாப்தமாக ஈஸ்வரனுடைய உபாயபாவம் ஸித்திக்கும்.