Maṇimēkalai's Renunciation 17.6
Maṇimēkalai urai 17.6
- Language
- Tamil
17.6
ஆதிரை பிச்சையிட்ட காதை
30 படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொன்னிறம் வழாது
விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த
திருவின் செய்யோள் போன்றினி திருப்பத்
29
உரை
34
படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப்படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும், உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல் பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும் பழைய நிறம் வழுவாமல், விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில் ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப ;
படுத்து-அடுக்கியென்றுமாம். பாயல் - படுக்கை. பள்ளி - இடம். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; இன்சாரியை அல்வழிக் கண்வந்தது. உறாது வழாது என்னும் எதிர்மறை யெச்சங்கள் இனிதிருப்ப என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. போன்று - போலுமாறு எனலுமாம். எரியும் ஈமத்திற்குச் செந்தாமரை மலரும், அதில் ஊறின்றியிருக்கும் ஆதிரைக்குத் திருமகளும் உவமை.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil