Maṇimēkalai's Renunciation 27.4
Maṇimēkalai urai 27.4
- Language
- Tamil
27.4
வஞ்சிமா நகர் புக்க காதை
30
ஆங்கவன் மனைவி யழுதன ளரற்றி
ஏங்கிமெய் பெயர்ப்போ ளிறுவரை யேறி
இட்ட சாபங் கட்டிய தாகும்
உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
29
உரை
34
ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள் இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்டசாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங்கொண்டு செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்; மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; ¹''இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'' என்பது காண்க. உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந் தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு ² ''கடிபொழி லுடுத்த கலிங்கநன் னூட்டு, வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்...வழுவில் சாபம்பட்டனிர்'' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும் நன்கறியப்படும்
¹ சீவக. 1833. ² சிலப். 23 : 138-70.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil