Kumarasvamiya p128
Kumārasvāmīya p128
- Language
- Tamil
p128
திருமாலினது அழகிய நாபியிற் றோன்றிய பிரமதேவன் துன்புற்றுச் சிறை புக்கபின், அந்தப் பிரமனது குற்றமற்ற படைப்புத் தொழிலை மேற்கொண்ட குகபெருமானை அந்தப் பிரமதேவன் வணங்கத் தவறியவாறு தவறுவோர்கள், யமபுரத் தைக் காணநேர்ந்தபொழுது நெஞ்ச நடுங்குதலும், சுழலமிடுகின்ற கண்கள் அழுகைமழை பொழியுந் துன்பமும், தொண்டைவீங்கும்படி விழுந்தலறுந் துன்பமுஞ் சிறிதேனும் விட் டொழியுமோ? [ஒழியா என்றபடி.] (க)