Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p129

Kumārasvāmīya p129

Language
Tamil

p129

அழகிய பொன்மயமான கூர்மைவாய்ந்த வேலாயுதத்தினைத் திருக்கரத்தேந்தி யுள்ள முருகப் பெருமானுடைய திருவடிகளை அந்தப் பிரமதேவனைப்போல அன்போடு நாடோறும் வந்தியாத வம்பர்கள், மரணமடைந்து உயிர்கட்கு நியாயம் வழங்கும் யமதரும ராசனது நகரத்தைக் காணநேர்ந்த காலத்திற் கும்பியென்னு நரகத்திலும், புழுக்கள் குடை யும்படியான சேறுகளிலும், வன்மைமிக்க கடியுயிர்கள் தங்கிடங்களிலும், பலதிற வண்டு கள் செறிந்திருக்கும் இடங்களிலுங் கிடந்து மிகப் பலவாகிய துன்பமடைதலினின்றுந் தப்புவார்களோ? [தப்பார்கள்.] (உ)