Kumarasvamiya p190
Kumārasvāmīya p190
- Language
- Tamil
p190
உண்மை நெறியை விரும்பும் நன்மைவாய்ந்த உலகத்தோர்களே ! பூமியில் ஆன் மாக்கள் தமது உடம்பைவிட்டுப் பிரியும்போது அவற்றைப் பிடித்துச் செல்லும் வலிய தோள்களையுடைய யமன், பல ஆயுதங்களைக்கொண்டு சண்டை செய்வதைச் சிவகுமா ரன் பார்த்து, இலைபோலுள்ள அம்புகளில் ஐந்தை ஏவ; அவை, யமனுடம்பிலே தைத்தவுடன் அவன் நிலைகுலைந்து அறிவழிந்து பெரிய நீலகிரி யென்னும்படி தரை மேல் விழுந்தான்.