Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p191

Kumārasvāmīya p191

Language
Tamil

p191

உயர்ந்தோர்களே ! எண்ணிமுடியாத பல்வேறு உருவுடைப் பொருள்களும் வெந்து நீராகும்படி சூழ்பவனாகிய அக்கினிதேவன் கடுஞ்சினத்துடன் போர்புரி யத் தொடங்கினவுடன், ஈறிலாப் பரமசிவ குமாரன் அஞ்சாத ஆற்றலோடு ஒளியினைச் செய்கின்ற மூன்று பாணங்களை ஒருங்கே விட்டமாத்திரத்தில், அவை வந்து அக்கினி தேவனது உடம்பைத்தாவி வளைந்துகொண்டவுடனே, அவனும் நெஞ்சிலே திகில் கொண்டு மலைபோலக் கீழே வீழ்ந்தான்.