Kumarasvamiya p216
Kumārasvāmīya p216
- Language
- Tamil
p216
(திருக்கைலாயத் திருவிளையாடலிற் குறிப்பிட்டபடி) மனம் துன்பத்தி லும், உடல் சிறையிடமான மலைக்குகைக் கண்ணும் கிடக்கப்பெற்ற பிரமதேவ னது படைப்புத் தொழிலை முருகப்பெருமான் எவ்விடத்திருந்து கொண்டு எவ்வண்ணங் குறைவின்றிச் செய்தருளினான்? விளக்கவேண்டும் என்பீராகில், அன்பர்களே! சுவாமி நாதனருளால் உண்மையே பொருந்த உரைக்கக்கடவேன் (கேட்பீராக). மேற்சொன்ன கந்தகிரியிற் பீடம்பொருந்துமோரிடத்தில் மாணிக்க நிறத்து அழகிய சூரியனை நிகர்த்த தன் திருமேனி விளங்க அம்முருகன் வீற்றிருந்தான். (க)