Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p217

Kumārasvāmīya p217

Language
Tamil

p217

அத் திருவுருவத்தின் வலக் கரங்களில் அபயமும் உருத்திராக்க மாலையும் பொருந்தி நிற்கும். இடக்கரங்களில் வரதமுங் குன்றாவெழிலுடைக் கமண்டலமுந் தங்கிநிற்கும். அழகுவாய்ந்த இத்திருக்கோலத்திற்குத் திருமுகம், விளக்கமுடைச் சத் தியோஜாதமென்னு மொன்றேயாகும். கந்தக்கடவுள் எந்தத் தேவனது வரமும் பெறா மலே தன்னற்றலினாற் படைப்புத் தொழிலை இவ்வுருவத்திருந்து கொண்டு செய் தருளினான். (உ)