Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p221

Kumārasvāmīya p221

Language
Tamil

p221

இவ்வாறு கலக்கமடைந்து மீண்ட நந்திதேவர், சிவபெருமான் திருவடிகளைப் பணிந்து முருகவேளுரைத்த மாற்றம் கடினமானதாமென்று விண்ணப்பிக்கவே; விளக் கத்தோடு காணப்படும் இளஞ்சந்திரனையுங் குளிர்ந்த கங்கையையுஞ் சடையிற்றரித்த அப்பெருமான், குமாரக்கடவுள் முன்னெழுந்தருளி, "மைந்தா! விலங்கிடப்பட்ட கால்களை யுடைய பிரமனைச் சிறையினின்றும் விடுவி'' என்று கூற; நீதிக்கடுத்த திருவிளையாடல் களை மேற்கொண்ட இவ்விருமூர்த்திகளுள் முருகவேளும் ஏவலாளரைக் கொண்டு வேதாவின் விலங்கை நீக்கி விடுவித்தருளினன்.