Kumarasvamiya p220
Kumārasvāmīya p220
- Language
- Tamil
p220
அந்த முடிபிற் கொப்பிய சிவபெருமான் நந்திதேவரை யழைத்து, "நீ நங் குமாரனிடத்திற் சென்று இம்முடிபைத் தெரிவி" என்று பணித்தவுடன், பராக்கிரம சாலியாகிய அவரும் முருகவேளின் தாளினைகளைக் கண்டு (= வணங்கி) நன்மையான தீர் மானத்தைக்கொண்ட அச் சிவாஞ்ஞையை விண்ணப்பித்து, "பெருமானே! பிரமன் சிறையைத் தவிர்த்தருள்க" என்று கூற; அது செவிக்கொண்ட பிரான், (சிறைவாசம் போதாதெனுங் கருத்தாலே) "உன்னையும் பிரமனுக்கிட்ட தீர்ப்பினுட்படுத்துவேன் இங்கே'' என்று கூறவே, நந்திதேவர் உள்ளங்கலங்கித் திரும்பிவிட்டார். [கம் = பிர மன்.]