Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p225

Kumārasvāmīya p225

Language
Tamil

p225

மேன்மைவாய்ந்த பொதிகை மலையில் வீற்றிருக்குந் தவமுடைமையும் பொறை யுடைமையுஞ் சிறந்துள்ள அகத்தியமுனிவர், அகன்ற இவ்வுலக சிருட்டியினைச் செய்த குகேசன் சிவபெருமானுக்குங் குருவாயினானென்னும் பெருமையை யுணர்ந்து அக்கடவுள் முன் அன்போடுகூடிய அழகுடன் நின்று "குளிர்ந்த அருட்கண்ணுடையாய்! அடியே னுக்கு மருள்செய்து காத்தருள்வாயாக'' என்று அழகிய தமது கைகளை அஞ்சலித்துச் சாஷ்டாங்க வணக்கஞ் செய்தவுடன், அக்குருசுவாமியும் அவ்வாறே செய்தருளினான்.(அ)